• Mar 31 2025

கெஹலியவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை! சி.ஐ.டியில் ஆஜராகுமாறும் உத்தரவு

Chithra / Feb 1st 2024, 3:24 pm
image


முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்துள்ளார்.

இதேவேளை கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யாமைக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது கைதான 10 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவை கைதுசெய்யாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் நேற்று கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக அமைதியான முறையில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.

கெஹலியவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை சி.ஐ.டியில் ஆஜராகுமாறும் உத்தரவு முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அத்துடன் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்துள்ளார்.இதேவேளை கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யாமைக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது கைதான 10 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவை கைதுசெய்யாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் நேற்று கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக அமைதியான முறையில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement