• Nov 22 2024

ஆயுதமுனையில் கடத்தப்பட்ட மகன்- காப்பாற்ற முயன்ற தந்தை உயிரிழப்பு..!

Sharmi / Oct 22nd 2024, 9:41 pm
image

ஜீப் வாகனத்தில் வந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்ட மகனைக் காப்பாற்ற முற்பட்ட தந்தை அதே ஜீப் வாகனத்தில் நசுங்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இரத்தினபுரி, எஹெலியகொட பகுதியில் பதிவாகியுள்ளது.

கடந்த 19ஆம் திகதி மாலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனக் கூறி 6 பேர் கொண்ட குழுவொன்று ஜீப் வண்டியில் எஹெலியகொட இளைஞனின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

வீட்டில் இருந்த இளைஞனை அசிட் வீசி கைவிலங்கிட்டு பலவந்தமாக அழைத்துச் செல்ல முற்பட்ட போது, ​​இதனைத் தடுக்க முற்பட்ட இளைஞனின் தந்தை அதே ஜீப்பில் தொங்கிக் கொண்டிருந்தபடி சென்றுள்ளார்.

ஆனால் அந்தக் குழுவினர் தொடர்ந்து வாகனத்தைச் செலுத்திச் சென்றதால் இளைஞனின் தந்தை ஜீப் வாகனத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

கீழே விழுந்த 65 வயதுடைய தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடத்தப்பட்ட மகன் படுகாயமடைந்து வீதியில் விடப்பட்டதோடு உறவினர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட தகராறே இந்த தாக்குதலுக்கு காரணம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆயுதமுனையில் கடத்தப்பட்ட மகன்- காப்பாற்ற முயன்ற தந்தை உயிரிழப்பு. ஜீப் வாகனத்தில் வந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்ட மகனைக் காப்பாற்ற முற்பட்ட தந்தை அதே ஜீப் வாகனத்தில் நசுங்கி உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் இரத்தினபுரி, எஹெலியகொட பகுதியில் பதிவாகியுள்ளது.கடந்த 19ஆம் திகதி மாலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனக் கூறி 6 பேர் கொண்ட குழுவொன்று ஜீப் வண்டியில் எஹெலியகொட இளைஞனின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.வீட்டில் இருந்த இளைஞனை அசிட் வீசி கைவிலங்கிட்டு பலவந்தமாக அழைத்துச் செல்ல முற்பட்ட போது, ​​இதனைத் தடுக்க முற்பட்ட இளைஞனின் தந்தை அதே ஜீப்பில் தொங்கிக் கொண்டிருந்தபடி சென்றுள்ளார்.ஆனால் அந்தக் குழுவினர் தொடர்ந்து வாகனத்தைச் செலுத்திச் சென்றதால் இளைஞனின் தந்தை ஜீப் வாகனத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார்.கீழே விழுந்த 65 வயதுடைய தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், கடத்தப்பட்ட மகன் படுகாயமடைந்து வீதியில் விடப்பட்டதோடு உறவினர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தனிப்பட்ட தகராறே இந்த தாக்குதலுக்கு காரணம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement