• Feb 07 2026

பாரிய வெள்ள அனர்த்தத்தில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி!

dileesiya / Nov 29th 2025, 3:49 pm
image

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பல வீதிகளின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஊடாக வட்டக்கச்சி செல்லும் கண்டி வீதி இரணமடு குளத்தின் மேல் அதிக நீர் வெளியேற்றப்படுவதன் காரணமாக போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று ஏ 35 பரந்தன் முல்லை தீவுக்கான பிரதான வீதி கண்டவளை பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் உள்ள பாலத்தில் வெள்ள நீர் வீதியின்  குறுக்கே ஓடுவதன் காரணமாக முல்லைத்தீவு கிளிநொச்சிக்கான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பெரிய குளம் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இராணுவத்தினர் மற்றும் கடல் படையினர் கண்டாவளை பிரதேச செயலர் இணைந்து பெரியகுளம் அப்பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு படகுகள் மூலம் அவர்களை ஏற்றி அனுப்பி வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது  நேரடியாக வெள்ள பாதிப்புகளை 2500 க்கும் மேற்பட்டவர்கள் எதிர்நோக்கியுள்ளனர் அத்துடன் பெருமளவானோர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் அத்துடன் இவர்களுக்கான சமைத்த உணவை வழங்கும் நடவடிக்கைகள் பிரதேச செயலங்கள் இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

பாரிய வெள்ள அனர்த்தத்தில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.அத்துடன் பல வீதிகளின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி ஊடாக வட்டக்கச்சி செல்லும் கண்டி வீதி இரணமடு குளத்தின் மேல் அதிக நீர் வெளியேற்றப்படுவதன் காரணமாக போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஏ 35 பரந்தன் முல்லை தீவுக்கான பிரதான வீதி கண்டவளை பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் உள்ள பாலத்தில் வெள்ள நீர் வீதியின்  குறுக்கே ஓடுவதன் காரணமாக முல்லைத்தீவு கிளிநொச்சிக்கான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.அத்துடன் கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பெரிய குளம் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இராணுவத்தினர் மற்றும் கடல் படையினர் கண்டாவளை பிரதேச செயலர் இணைந்து பெரியகுளம் அப்பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு படகுகள் மூலம் அவர்களை ஏற்றி அனுப்பி வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது  நேரடியாக வெள்ள பாதிப்புகளை 2500 க்கும் மேற்பட்டவர்கள் எதிர்நோக்கியுள்ளனர் அத்துடன் பெருமளவானோர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் அத்துடன் இவர்களுக்கான சமைத்த உணவை வழங்கும் நடவடிக்கைகள் பிரதேச செயலங்கள் இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement