இருவர் பங்கு பற்றும் கடற்கரை கைப்பந்து தேசியப் போட்டிக்கு கிளிநொச்சியை சேர்ந்த வீரர்கள் இருவர்கள் அழைத்துச்செல்லப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இருவரினையும் நிதிப்பற்றாக்குறையினை காரணம் காட்டியே அவர்களை அழைத்து செல்லவில்லை.
கிளிநொச்சி மலையாளபுரத்தைச் சேர்ந்த புதிய பாரதி விளையாட்டுக் கழகத்தின் இரண்டு வீரர்களும் கரைச்சி பிரதேச செயலக பிரிவு, மாவட்ட, மாகாண மட்டங்களில் மேற்படி போட்டிகளில் பங்குகொண்டு வெற்றியீட்டியுள்ளனர்.
இவர்களுக்கான தேசிய போட்டி நீர்கொழும்பில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்து சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் இடம்பெறுகி றது. இந்தப் போட்டிக்கு மேற்படி வீரர்கள் இருவரும் உரிய அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்படவில்லை.
இது குறித்து சம்பந்த பட்டுள்ள அதிகாரிகள் கருத்து வெளியிடும் போது “நீர்கொழும்பில் மூன்று நாள்கள் தங்கியிருக்கவேண்டும். ஒருநாள் தங்குமிட செலவுக்கே 8 ஆயிரத்து 500 ரூபா தேவைப்படுகிறது. ஆனால், குறித்த நிதிக்கு ஏற்பாடுசெய்து தரப்படவில்லை. இதன் காரணமாக தேசியமட்டப் போட்டிக்கு வடக்கு மாகாணத்தில் தெரிவுசெய் யப்பட்ட இரண்டு வீரர்களை அழைத்துச் செல்லமுடியாது போய்விட்டது” எனத் தெரிவித்தனர்.
கைப்பந்து விளையாட்டில் கிளிநொச்சி வீரர்கள் புறக்கணிப்பு. இருவர் பங்கு பற்றும் கடற்கரை கைப்பந்து தேசியப் போட்டிக்கு கிளிநொச்சியை சேர்ந்த வீரர்கள் இருவர்கள் அழைத்துச்செல்லப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.குறித்த இருவரினையும் நிதிப்பற்றாக்குறையினை காரணம் காட்டியே அவர்களை அழைத்து செல்லவில்லை. கிளிநொச்சி மலையாளபுரத்தைச் சேர்ந்த புதிய பாரதி விளையாட்டுக் கழகத்தின் இரண்டு வீரர்களும் கரைச்சி பிரதேச செயலக பிரிவு, மாவட்ட, மாகாண மட்டங்களில் மேற்படி போட்டிகளில் பங்குகொண்டு வெற்றியீட்டியுள்ளனர். இவர்களுக்கான தேசிய போட்டி நீர்கொழும்பில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்து சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் இடம்பெறுகி றது. இந்தப் போட்டிக்கு மேற்படி வீரர்கள் இருவரும் உரிய அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்படவில்லை.இது குறித்து சம்பந்த பட்டுள்ள அதிகாரிகள் கருத்து வெளியிடும் போது “நீர்கொழும்பில் மூன்று நாள்கள் தங்கியிருக்கவேண்டும். ஒருநாள் தங்குமிட செலவுக்கே 8 ஆயிரத்து 500 ரூபா தேவைப்படுகிறது. ஆனால், குறித்த நிதிக்கு ஏற்பாடுசெய்து தரப்படவில்லை. இதன் காரணமாக தேசியமட்டப் போட்டிக்கு வடக்கு மாகாணத்தில் தெரிவுசெய் யப்பட்ட இரண்டு வீரர்களை அழைத்துச் செல்லமுடியாது போய்விட்டது” எனத் தெரிவித்தனர்.