• Dec 12 2024

ஜனாதிபதி தேர்தல்; ரணிலுக்கு பெருகும் ஆதரவு - இவ்வாரம் வெளிவரவுள்ள முக்கிய அறிவிப்பு! மஹிந்தவுடன் விசேட சந்திப்பு

Chithra / Jun 2nd 2024, 10:49 am
image

 

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இந்த வாரம் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் 5ஆம் திகதி  இடம்பெறவுள்ளது.

இதேவேளை,  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி உட்பட ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைவார்கள் என்று கூறப்படுவதுடன், 

அந்த வகையில், பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன முதலில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய பேச்சுவார்த்தைகள் மிக நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றது. 

அந்த பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. 

பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 17ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளார்.

இதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதை உறுதியாக அறிவிக்க வேண்டும் என்பது பொதுஜன பெரமுன உட்பட அவருக்கு ஆதரவு வழங்கும் தரப்புகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

இவ்வாறானதொரு நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

மறுபுறம் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியினர் 8ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் ஜனாதிபதி ரணிலை ஆதரிக்கும் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளனர். 

அத்துடன் அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஏற்பாட்டில் மாத்தறையில் எதிர்வரும் 16ஆம் திகதி கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தல்; ரணிலுக்கு பெருகும் ஆதரவு - இவ்வாரம் வெளிவரவுள்ள முக்கிய அறிவிப்பு மஹிந்தவுடன் விசேட சந்திப்பு  ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இந்த வாரம் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் 5ஆம் திகதி  இடம்பெறவுள்ளது.இதேவேளை,  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி உட்பட ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைவார்கள் என்று கூறப்படுவதுடன், அந்த வகையில், பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன முதலில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய பேச்சுவார்த்தைகள் மிக நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றது. அந்த பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 17ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளார்.இதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதை உறுதியாக அறிவிக்க வேண்டும் என்பது பொதுஜன பெரமுன உட்பட அவருக்கு ஆதரவு வழங்கும் தரப்புகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறானதொரு நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மறுபுறம் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியினர் 8ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் ஜனாதிபதி ரணிலை ஆதரிக்கும் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளனர். அத்துடன் அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஏற்பாட்டில் மாத்தறையில் எதிர்வரும் 16ஆம் திகதி கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement