• May 17 2024

தென்னிந்திய திரைப்படத்தில் கில்மிஷவிற்கு வாய்ப்பு -மகிழ்ச்சியில் ரசிகர்கள்...!samugammedia

mathuri / Dec 29th 2023, 9:39 pm
image

Advertisement

தென்னிந்திய திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக இந்தியாவின் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றிவாகை சூடிய ஈழத்து குயில் கில்மிஷா தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய நிலையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தனக்கு மிகப்பெரிய வரவேற்பளித்த அனைவர்க்கும் நன்றியையையும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு ஆதரவளித்த நாட்டு மக்களுக்கும் , தென்னிந்திய மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக சுட்டிக்காட்டிய அவர் ரணில் விக்ரமசிங்க தனக்கு வாழ்த்து தெரிவித்தமை குறித்து பெருமை அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், யாழ். மக்களின் வரவேற்பானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும், ஆதரவளித்த சகோதர மொழி மக்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். 

அத்தோடு தனக்கு தென்னிந்திய திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்ததாகவும் சந்தோஷ் நாராயணனின் இசைநிகழ்ச்சியில் கலந்து கொள்வற்கான அழைப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை , இசைத்துறையில் மிகப்பெரிய பின்னணி பாடகராவதே தன்னுடைய விருப்பம் என்றும் அதனுடன்  வைத்தியராக வேண்டும் என்ற  இலட்சியத்தை நோக்கியும்  பயணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.


தென்னிந்திய திரைப்படத்தில் கில்மிஷவிற்கு வாய்ப்பு -மகிழ்ச்சியில் ரசிகர்கள்.samugammedia தென்னிந்திய திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக இந்தியாவின் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றிவாகை சூடிய ஈழத்து குயில் கில்மிஷா தெரிவித்தார்.இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய நிலையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தனக்கு மிகப்பெரிய வரவேற்பளித்த அனைவர்க்கும் நன்றியையையும் தெரிவித்துள்ளார்.மேலும், தனக்கு ஆதரவளித்த நாட்டு மக்களுக்கும் , தென்னிந்திய மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக சுட்டிக்காட்டிய அவர் ரணில் விக்ரமசிங்க தனக்கு வாழ்த்து தெரிவித்தமை குறித்து பெருமை அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும், யாழ். மக்களின் வரவேற்பானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும், ஆதரவளித்த சகோதர மொழி மக்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். அத்தோடு தனக்கு தென்னிந்திய திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்ததாகவும் சந்தோஷ் நாராயணனின் இசைநிகழ்ச்சியில் கலந்து கொள்வற்கான அழைப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.இதேவேளை , இசைத்துறையில் மிகப்பெரிய பின்னணி பாடகராவதே தன்னுடைய விருப்பம் என்றும் அதனுடன்  வைத்தியராக வேண்டும் என்ற  இலட்சியத்தை நோக்கியும்  பயணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement