சிறந்த இலக்கியப் பங்களிப்புக்கான விருதும், கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றமைக்கான விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார் கிண்ணியா சபீனா. இந்த கௌரவிப்பு நிகழ்வு, ஸ்கை தமிழ் ஊடகம் மற்றும் துணிந்தெழு சஞ்சிகை ஆகியவற்றின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜே.எம்.பாசித் தலைமையில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (19) சனிக்கிழமை மாலை வெகுசிறப்பாக நடைபெற்றது.
தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் சிறந்த இலக்கியப் பங்களிப்புக்கான விருதினையும் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றமைக்கான விருதினை புரவலர் ஹாஷிம் உமரினாலும் இவருக்கு வழங்கி வைக்கப்பட்டன!இங்கு, ஊடகத்துறை, இலக்கியத்துறை, விளையாட்டுத்துறை மற்றும் சமூகசேவை, விவசாயம் எனப் பல்வேறு துறைகளில் ஈடுபாடு கொண்ட ஆளுமைகள் கெளரவிக்கப் பட்டனர்!
இந்நிகழ்வில், புரவலர் ஹாசிம் உமர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீத், கலை கலாச்சார பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில், தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், கலாபூஷணம் என், நஜிமுல் ஹுசைன், கலாபூஷணம் திருமதி நூறுல்ஐன் நஜ்முல் ஹுசைன், திருமதி மர்யம் மன்சூர் நலீமுடீன் உட்பட இன்னும் பல பிரமுகர்கள் அதிதிகளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிறந்த இலக்கியப் பங்களிப்புக்கான விருதுபெற்றார் கிண்ணியா சபீனா சிறந்த இலக்கியப் பங்களிப்புக்கான விருதும், கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றமைக்கான விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார் கிண்ணியா சபீனா. இந்த கௌரவிப்பு நிகழ்வு, ஸ்கை தமிழ் ஊடகம் மற்றும் துணிந்தெழு சஞ்சிகை ஆகியவற்றின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜே.எம்.பாசித் தலைமையில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (19) சனிக்கிழமை மாலை வெகுசிறப்பாக நடைபெற்றது.தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் சிறந்த இலக்கியப் பங்களிப்புக்கான விருதினையும் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றமைக்கான விருதினை புரவலர் ஹாஷிம் உமரினாலும் இவருக்கு வழங்கி வைக்கப்பட்டனஇங்கு, ஊடகத்துறை, இலக்கியத்துறை, விளையாட்டுத்துறை மற்றும் சமூகசேவை, விவசாயம் எனப் பல்வேறு துறைகளில் ஈடுபாடு கொண்ட ஆளுமைகள் கெளரவிக்கப் பட்டனர்இந்நிகழ்வில், புரவலர் ஹாசிம் உமர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீத், கலை கலாச்சார பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில், தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், கலாபூஷணம் என், நஜிமுல் ஹுசைன், கலாபூஷணம் திருமதி நூறுல்ஐன் நஜ்முல் ஹுசைன், திருமதி மர்யம் மன்சூர் நலீமுடீன் உட்பட இன்னும் பல பிரமுகர்கள் அதிதிகளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.