யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுற்றுக் கேடயத்துக்கான மட்டுப்படுத்தப்பட்ட பந்துப் பரிமாற்றங்களைக்கொண்ட சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை பதில் துணைவேந்தரும், கலைப் பீடாதிபதியுமான பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் நடைபெற்றது.
யாழ். பல்கலைக்கழகத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவரும், தாவரவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் இ.கபிலன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்தச் சுற்றுப் போட்டியின் மூன்றாவது இடத்தை யூ.ஓ.ஜே ஈகிள்ஸ் அணியும், இரண்டாவது இடத்தை யூ.ஓ.ஜே ரைற்றன்ஸ் அணியும் பெற்றுக் கொண்டன. யூ.ஓ.ஜே வாறியர்ஸ் அணி முதலாமிடத்தைப் பெற்று சுற்றுக் கேடயத்தைத் தனதாக்கிக் கொண்டது.
யாழ்.பல்கலை. துணைவேந்தர் சுற்றுக்கேடய சுற்றுப் போட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுற்றுக் கேடயத்துக்கான மட்டுப்படுத்தப்பட்ட பந்துப் பரிமாற்றங்களைக்கொண்ட சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை பதில் துணைவேந்தரும், கலைப் பீடாதிபதியுமான பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் நடைபெற்றது.யாழ். பல்கலைக்கழகத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவரும், தாவரவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் இ.கபிலன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்தச் சுற்றுப் போட்டியின் மூன்றாவது இடத்தை யூ.ஓ.ஜே ஈகிள்ஸ் அணியும், இரண்டாவது இடத்தை யூ.ஓ.ஜே ரைற்றன்ஸ் அணியும் பெற்றுக் கொண்டன. யூ.ஓ.ஜே வாறியர்ஸ் அணி முதலாமிடத்தைப் பெற்று சுற்றுக் கேடயத்தைத் தனதாக்கிக் கொண்டது.