• Feb 14 2026

கொஹுவல துப்பாக்கிச் சூடு: பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

Chithra / Jan 2nd 2026, 9:06 am
image


கொஹுவல - போதியவத்தை பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 16 வயது சிறுமி காயமடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட சந்தேகநபர்களில் ஒருவரை அடையாளம் கண்டுள்ள பொலிஸார், பொலிஸ் சித்திரக் கலைஞரின் உதவியுடன் அவரது உருவப்படத்தை வரைந்துள்ளனர். 


ஆகவே, சந்தேக நபர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் கொஹுவல பொலிஸ் நிலையம் அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


தகவல் தெரிந்தவர்கள் கொஹுவல பொலிஸை 071-8591669 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 


அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவை 071-4146727 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


விசாரணையை விரைவுபடுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.


கொஹுவல துப்பாக்கிச் சூடு: பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார் கொஹுவல - போதியவத்தை பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 16 வயது சிறுமி காயமடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட சந்தேகநபர்களில் ஒருவரை அடையாளம் கண்டுள்ள பொலிஸார், பொலிஸ் சித்திரக் கலைஞரின் உதவியுடன் அவரது உருவப்படத்தை வரைந்துள்ளனர். ஆகவே, சந்தேக நபர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் கொஹுவல பொலிஸ் நிலையம் அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.தகவல் தெரிந்தவர்கள் கொஹுவல பொலிஸை 071-8591669 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவை 071-4146727 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.விசாரணையை விரைவுபடுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement