• Nov 06 2024

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி என்பது அரசின் உள்ளக பொறிமுறையே - கஜேந்திரன் எம்பி தெரிவிப்பு...!

Anaath / Jul 13th 2024, 6:20 pm
image

Advertisement

கொக்குத்தொடுவாய் அகழ்வுப்பணி என்பது முற்று முழுவதுமாக உள்ளக பொறிமுறையாக முன்னெடுக்கப் படுவது என்பதும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மத்தியிலே எந்த விதிகமான நம்பிக்கையையும் ஏற்படுத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

இன்றையதினம் முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய்  மனிதப்புதைகுழியின் 9 ஆம் நாள் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில்  இன்றைய தினம் அந்த  இடத்துக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குறித்த அகழ்வுப்பணிகளை பார்வையிட்டார்.

இதன்பின்னர் இடப்பெற்றுள்ள ஊடக சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

காணாமல் போனோர்  அலுவலகம் என்பது காணாமல்  ஆக்கப்பட்டவர்களுக்கு நேர்மையாக செயல்படவில்லை. அரசை பாதுகாக்கின்ற பணியிலேதான் அது ஈடுபட்டு கொண்டிருக்கிறது என்பது  எல்லோருக்கும் தெரியும் அதன் காரணமாக இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நேர்மையாக செயல்படவில்லை. 

ஆரம்பத்திலிருந்து இந்த வலிந்து காணாமல் போனோர் அலுவலகத்தை ஏமாற்றுவதற்காக இலங்கை அரசினால் உருவாக்கப்பட்ட காணாமலாக்கப்பட்ட அலுவலக பொறிமுறையை நாங்கள் நிராகரிக்கின்றோம். அந்த வகையிலே முழுமையான சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது எங்களுடையதும் பாதிக்கப்பட்ட மக்களினுடையதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது

இந்த கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டிருக்கிற இடம்  1984 ஆம் ஆண்டு இந்த பகுதியிலிருந்து மக்கள் வெளியேறிய பிற்பாடு இந்த பகுதி இராணுவத்தினுடைய கட்டுப்பாட்டில் இருந்தது. 

குறிப்பாக  இந்த பகுதியிலே ஒரு இராணுவ முகாம் இருந்திருக்கிறது. இந்த புதைகுழி கண்டு பிடிக்கப்பட்ட இடத்திலிருந்து கடற்கரை நோக்கி சுமார் ஒரு கிலோமீற்றர் ஒரு காப்பரண் ஒன்று படையினரால் அமைக்கப்பட்டிருந்திருக்கிறது. அந்த காப்பரண் முழுவதும் உடலங்கள்  இருந்திருக்கிறது என்பது பாதிக்கப்பட்ட மக்களது  வலுத்த சந்தேகமாக இருக்கிறது. குறித்த குழியினை தோண்டும் பணிகள் மக்களை திருப்திப்படுத்தும் விதமாக உண்மையை கண்டறிய கூடிய விதம் பாரிய கேள்வியாக இருக்கிறது. இங்கே அனைத்தும்  உள்ளக பொறிமுறையாக இருக்கிறது.

இந்த அகழ்வுப்பணித்தியானது சர்வதேச சமூகத்துக்கு கண்துடைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை. 

அதனை விட இங்கே பயங்கரவாத தடைச்சட்டம் நடை பெற இருக்கின்ற சூழலிலே இது குறித்த தகவல்களை  பெருமளவான போராளிகள் எந்த காலப்பகுதியில் நடந்தது என்ரூ கூறுவதற்கான சூழல் இருக்கும். யாராவது உண்மைகளை சொல்ல வந்தால் அவர்கள் நிச்சயமாக பழிவாங்க கூடிய , அடைத்து துன்புறுத்தும் சூழல் இருக்கிறது.

ஆகவே இது தொடர்பான தகவல்களை அறிந்திருக்க கூடியவர்கள் அனைத்துமே விடுதலை புலிகள் இயக்கம் சம்பந்த பட்ட அடையாளங்கள் தான் வெளி வந்து கொண்டிருக்கிறது.  இவர்கள் கைது செய்யப்பட்ட பொழுது தப்பியிருந்தால் அல்லது அது தொடர்பான தகவல் அறிந்திருந்தால் அது தொடர்பாக தெரிந்த  பொது மக்களோ அல்லது முன்னாள் போராளிகளோ தகவல்களை வெளிப்படுத்த முடியாத நியாயமற்ற, பாதுகாப்பற்ற இலங்கை அரச பொறிமுறைக்குள் நீதியை பெற்றுக்கொள்ள முடியாது. 

இந்த விடயங்களை ஆய்வு செய்வதற்கு ஒரு சர்வதேச பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். 

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அமெரிக்க தூதுவர் சொல்லியிருக்கிறார்.  அதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் கடந்த 15 வருடங்களாக பொறுப்பு கூறல் விவகாரத்தை முடக்கி வைத்திருப்பதில் மிகப்பெரிய பங்கிருக்கிறது. 

இதன் மூலமாக இந்த யுத்த குற்ற்க்குற்றவாளிகளுக்கு ஒரு பொழுதும் தண்டனை வழங்கப்படாது. ஒரு புறம்  நம்பிக்கையை இனப்படுகொலையாளிகளுக்கு கொடுத்துக்கொண்டு மறு  புறத்திலே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி என்பது முதலைக்கண்ணீர் வடிக்கின்ற செயல்பாடாக தான் பார்க்கின்றோம். 

ஆகவே அமெரிக்கா பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறது என்று சொன்னால் இந்த விவகாரத்தினை  சர்வதேச குற்றவியல்  நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதற்கு  உடனடி நடவடிக்கை வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி என்பது அரசின் உள்ளக பொறிமுறையே - கஜேந்திரன் எம்பி தெரிவிப்பு. கொக்குத்தொடுவாய் அகழ்வுப்பணி என்பது முற்று முழுவதுமாக உள்ளக பொறிமுறையாக முன்னெடுக்கப் படுவது என்பதும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மத்தியிலே எந்த விதிகமான நம்பிக்கையையும் ஏற்படுத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய்  மனிதப்புதைகுழியின் 9 ஆம் நாள் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில்  இன்றைய தினம் அந்த  இடத்துக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குறித்த அகழ்வுப்பணிகளை பார்வையிட்டார்.இதன்பின்னர் இடப்பெற்றுள்ள ஊடக சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் போனோர்  அலுவலகம் என்பது காணாமல்  ஆக்கப்பட்டவர்களுக்கு நேர்மையாக செயல்படவில்லை. அரசை பாதுகாக்கின்ற பணியிலேதான் அது ஈடுபட்டு கொண்டிருக்கிறது என்பது  எல்லோருக்கும் தெரியும் அதன் காரணமாக இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நேர்மையாக செயல்படவில்லை. ஆரம்பத்திலிருந்து இந்த வலிந்து காணாமல் போனோர் அலுவலகத்தை ஏமாற்றுவதற்காக இலங்கை அரசினால் உருவாக்கப்பட்ட காணாமலாக்கப்பட்ட அலுவலக பொறிமுறையை நாங்கள் நிராகரிக்கின்றோம். அந்த வகையிலே முழுமையான சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது எங்களுடையதும் பாதிக்கப்பட்ட மக்களினுடையதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றதுஇந்த கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டிருக்கிற இடம்  1984 ஆம் ஆண்டு இந்த பகுதியிலிருந்து மக்கள் வெளியேறிய பிற்பாடு இந்த பகுதி இராணுவத்தினுடைய கட்டுப்பாட்டில் இருந்தது. குறிப்பாக  இந்த பகுதியிலே ஒரு இராணுவ முகாம் இருந்திருக்கிறது. இந்த புதைகுழி கண்டு பிடிக்கப்பட்ட இடத்திலிருந்து கடற்கரை நோக்கி சுமார் ஒரு கிலோமீற்றர் ஒரு காப்பரண் ஒன்று படையினரால் அமைக்கப்பட்டிருந்திருக்கிறது. அந்த காப்பரண் முழுவதும் உடலங்கள்  இருந்திருக்கிறது என்பது பாதிக்கப்பட்ட மக்களது  வலுத்த சந்தேகமாக இருக்கிறது. குறித்த குழியினை தோண்டும் பணிகள் மக்களை திருப்திப்படுத்தும் விதமாக உண்மையை கண்டறிய கூடிய விதம் பாரிய கேள்வியாக இருக்கிறது. இங்கே அனைத்தும்  உள்ளக பொறிமுறையாக இருக்கிறது.இந்த அகழ்வுப்பணித்தியானது சர்வதேச சமூகத்துக்கு கண்துடைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை. அதனை விட இங்கே பயங்கரவாத தடைச்சட்டம் நடை பெற இருக்கின்ற சூழலிலே இது குறித்த தகவல்களை  பெருமளவான போராளிகள் எந்த காலப்பகுதியில் நடந்தது என்ரூ கூறுவதற்கான சூழல் இருக்கும். யாராவது உண்மைகளை சொல்ல வந்தால் அவர்கள் நிச்சயமாக பழிவாங்க கூடிய , அடைத்து துன்புறுத்தும் சூழல் இருக்கிறது.ஆகவே இது தொடர்பான தகவல்களை அறிந்திருக்க கூடியவர்கள் அனைத்துமே விடுதலை புலிகள் இயக்கம் சம்பந்த பட்ட அடையாளங்கள் தான் வெளி வந்து கொண்டிருக்கிறது.  இவர்கள் கைது செய்யப்பட்ட பொழுது தப்பியிருந்தால் அல்லது அது தொடர்பான தகவல் அறிந்திருந்தால் அது தொடர்பாக தெரிந்த  பொது மக்களோ அல்லது முன்னாள் போராளிகளோ தகவல்களை வெளிப்படுத்த முடியாத நியாயமற்ற, பாதுகாப்பற்ற இலங்கை அரச பொறிமுறைக்குள் நீதியை பெற்றுக்கொள்ள முடியாது. இந்த விடயங்களை ஆய்வு செய்வதற்கு ஒரு சர்வதேச பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அமெரிக்க தூதுவர் சொல்லியிருக்கிறார்.  அதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் கடந்த 15 வருடங்களாக பொறுப்பு கூறல் விவகாரத்தை முடக்கி வைத்திருப்பதில் மிகப்பெரிய பங்கிருக்கிறது. இதன் மூலமாக இந்த யுத்த குற்ற்க்குற்றவாளிகளுக்கு ஒரு பொழுதும் தண்டனை வழங்கப்படாது. ஒரு புறம்  நம்பிக்கையை இனப்படுகொலையாளிகளுக்கு கொடுத்துக்கொண்டு மறு  புறத்திலே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி என்பது முதலைக்கண்ணீர் வடிக்கின்ற செயல்பாடாக தான் பார்க்கின்றோம். ஆகவே அமெரிக்கா பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறது என்று சொன்னால் இந்த விவகாரத்தினை  சர்வதேச குற்றவியல்  நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதற்கு  உடனடி நடவடிக்கை வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement