• Nov 21 2024

குவைத்திலுள்ள மனைவிக்காக கணவன் எடுத்த விபரீத முடிவு - சடலமாக மீட்கப்பட்ட ஐந்து பிள்ளைகளின் தந்தை

Chithra / May 27th 2024, 8:50 am
image

 

வெளிநாட்டில் உள்ள தனது மனைவியை இலங்கைக்கு அழைத்து வர போதிய பணம் இல்லாததால் மனம் உடைந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையின் சடலம் கிரம ஓயாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தங்காலை - மாத்தர பகுதியைச் சேர்ந்த ஹேவகே பியதிலக என்ற 52 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் மனைவியான நிலானி மூன்று மாதங்களுக்கு முன்பு குவைத் சென்றுள்ளார்.

அவர் பல வீடுகளில் வேலை செய்தாலும், அந்த வீடுகளில் வேலை செய்வது கடினம் என்று தொழில் வழங்கிய வீட்டு உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மனைவியை இலங்கைக்கு அழைத்து வர அவரது கணவர் முயற்சித்ததாகவும், ஆனால் முகவர் நிறுவனம் 5 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கணவர், வீட்டுக் காணியை அடமானம் வைத்து, கடன் வாங்க முயன்றும் தோல்வியடைந்துள்ளார். 

இதனால் தந்தை மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் மகள்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் தங்காலை வீரகட்டிய வீதியில் தங்கெட்டிய பிரதேசத்தில் கிரம ஓயாவின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டில் இருந்து ஒருவர் கிரம ஓயாவில் தவறி விழுந்ததாக தங்காலை தலைமையக பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளது.

பொலிஸாரும் பிரதேசவாசிகளும் காணாமல் போனவரைத் தேடியபோது நேற்று பிற்பகல் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

கண்டெடுக்கப்பட்டவரின் சடலம் தமது தந்தையுடையது என மகள்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குவைத்திலுள்ள மனைவிக்காக கணவன் எடுத்த விபரீத முடிவு - சடலமாக மீட்கப்பட்ட ஐந்து பிள்ளைகளின் தந்தை  வெளிநாட்டில் உள்ள தனது மனைவியை இலங்கைக்கு அழைத்து வர போதிய பணம் இல்லாததால் மனம் உடைந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையின் சடலம் கிரம ஓயாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தங்காலை - மாத்தர பகுதியைச் சேர்ந்த ஹேவகே பியதிலக என்ற 52 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின் மனைவியான நிலானி மூன்று மாதங்களுக்கு முன்பு குவைத் சென்றுள்ளார்.அவர் பல வீடுகளில் வேலை செய்தாலும், அந்த வீடுகளில் வேலை செய்வது கடினம் என்று தொழில் வழங்கிய வீட்டு உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக மனைவியை இலங்கைக்கு அழைத்து வர அவரது கணவர் முயற்சித்ததாகவும், ஆனால் முகவர் நிறுவனம் 5 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் தெரியவந்துள்ளது.இதையடுத்து கணவர், வீட்டுக் காணியை அடமானம் வைத்து, கடன் வாங்க முயன்றும் தோல்வியடைந்துள்ளார். இதனால் தந்தை மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் மகள்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் நேற்று பிற்பகல் தங்காலை வீரகட்டிய வீதியில் தங்கெட்டிய பிரதேசத்தில் கிரம ஓயாவின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டில் இருந்து ஒருவர் கிரம ஓயாவில் தவறி விழுந்ததாக தங்காலை தலைமையக பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளது.பொலிஸாரும் பிரதேசவாசிகளும் காணாமல் போனவரைத் தேடியபோது நேற்று பிற்பகல் சடலம் கண்டெடுக்கப்பட்டது.கண்டெடுக்கப்பட்டவரின் சடலம் தமது தந்தையுடையது என மகள்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement