• Sep 21 2024

தமிழ் மக்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட காணிகள்: வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்! Samugammedia

Tamil nila / Jun 13th 2023, 6:40 am
image

Advertisement

தமிழ் மக்களின் காணிகள் தொல்பொருள் திணைக்களத்தினால் கடந்த காலங்களில் பலவந்தமாக கையப்படுத்தப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுடன், தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தமது நிலங்கங்களுக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், வடக்கு, கிழக்கில் தொல்பொருள் திணைக்களம் ஏதேச்சையான முறையில் தமிழ் மக்களின் வாழ்வாதார காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் காணப்படும் 229 ஏக்கர் காணியை விடுப்பதற்கான கடிதத்தை ஜூன் 31ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உறுதியளித்திருந்தார்.

எனினும் இதுவரையில் அதற்கான பதில் வழங்கப்படாத நிலையில், இது குறித்து  கடந்த சில நாட்களுக்கு முன் ஜனாதிபதி மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் அளிப்பதற்கு தடுமாற்றத்துடன் பதிலளித்துள்ளனர்.

இந்நிலையில் தொல்பொருள் திணைக்கள காணி ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பில்  ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை கடுமையாக சாடியுள்ள காணொளி தற்போது ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பின் போது”நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கின்றீர்களா? அல்லது நான் உங்களுக்கு கற்பிக்க வேண்டுமா ? என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே இந்த நிகழ்வு நடந்தது.

தொல்பொருள் திணைக்களம் ஒன்றை அமைப்பதற்காக 270 ஏக்கர் நிலப்பரப்பை ஒதுக்க தாம் திட்டமிடுவதாக உத்தியோகத்தர் ஒருவர் கூறிய போது, அது மஹா விகாரையை விடப் பெரியதா என ஜனாதிபதி அதிகாரியிடம் வினவியுள்ளார்.

எதற்காக உங்களுக்கு 270 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது? அது மஹா விகாரையை விடப் பெரியதா?  மஹா விகாரை, ஜேதவனாராமய விகாரை, அபயகிரி ஆகிய மூன்றும் சேர்ந்து கூட  100 ஏக்கர் நிலத்தை எடுக்காது,'' என ஜனாதிபதி மேலும் கேள்விகளை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட காணிகள்: வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள் Samugammedia தமிழ் மக்களின் காணிகள் தொல்பொருள் திணைக்களத்தினால் கடந்த காலங்களில் பலவந்தமாக கையப்படுத்தப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுடன், தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தமது நிலங்கங்களுக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில், வடக்கு, கிழக்கில் தொல்பொருள் திணைக்களம் ஏதேச்சையான முறையில் தமிழ் மக்களின் வாழ்வாதார காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் காணப்படும் 229 ஏக்கர் காணியை விடுப்பதற்கான கடிதத்தை ஜூன் 31ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உறுதியளித்திருந்தார்.எனினும் இதுவரையில் அதற்கான பதில் வழங்கப்படாத நிலையில், இது குறித்து  கடந்த சில நாட்களுக்கு முன் ஜனாதிபதி மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் அளிப்பதற்கு தடுமாற்றத்துடன் பதிலளித்துள்ளனர்.இந்நிலையில் தொல்பொருள் திணைக்கள காணி ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பில்  ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை கடுமையாக சாடியுள்ள காணொளி தற்போது ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது.குறித்த சந்திப்பின் போது”நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கின்றீர்களா அல்லது நான் உங்களுக்கு கற்பிக்க வேண்டுமா என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே இந்த நிகழ்வு நடந்தது.தொல்பொருள் திணைக்களம் ஒன்றை அமைப்பதற்காக 270 ஏக்கர் நிலப்பரப்பை ஒதுக்க தாம் திட்டமிடுவதாக உத்தியோகத்தர் ஒருவர் கூறிய போது, அது மஹா விகாரையை விடப் பெரியதா என ஜனாதிபதி அதிகாரியிடம் வினவியுள்ளார்.எதற்காக உங்களுக்கு 270 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது அது மஹா விகாரையை விடப் பெரியதா  மஹா விகாரை, ஜேதவனாராமய விகாரை, அபயகிரி ஆகிய மூன்றும் சேர்ந்து கூட  100 ஏக்கர் நிலத்தை எடுக்காது,'' என ஜனாதிபதி மேலும் கேள்விகளை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement