வடக்கு மாகாணத்தில் உரிமைகோரப்படாத காணிகளை அரசுடமையாக்கும் அரசாங்கத்தின் செயல் முறையற்றது எனவும் இது தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வடபகுதியில் ஐயாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பது ஏக்கர் காணியினை கபளீகரம் செய்யப்படுவதை தடுத்து நிறுத்தும் முகமாக இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு வெற்றிலைக்கேணியில் நேற்றையதினம்(02) ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது அங்கு உரையாற்றும் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 28.03.2025ஆம் திகதி இடப்பட்ட வர்த்தமானியிலே மேற்படி ஏக்கர் காணியினை மூன்று மாதத்திற்குள் உரிமை கோரப்படாதவிடத்தில் அரச காணியாக அபகரிக்கப்படுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலிலே யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்கிலேயே பிரதானமாக இந்த வர்த்தமானி பிரசுரத்தில் பல காணிகளை அடையாளப்படுத்தியிருக்கின்றது.
இவ்வாறு தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அரசகாணியாக்குவதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. அதற்கு தமிழ் இங்குள்ள தமிழ் மக்களும் அனுமதிக்கக்கூடாது.
இந்த அரசாங்கம் ஒருபக்கத்திலே காணிகளை விடுவிப்பதாக கூறிக்கொண்டு மறுபக்கத்தில் இதெல்லாம் கைவிடப்பட்ட காணிகள் தரிசு நிலங்கள் என தெரிவித்து அரச உடைமையாக்க முனைவது மிகவும் மோசமான செயற்பாடு.
எனவே, அரசாங்கம் உடனடியாக இதை கைவிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
வடக்கில் அரசுடைமையாக்கப்படவுள்ள காணிகள்: வர்த்தமானியை ரத்து செய்யுங்கள்- சுமந்திரன் வலியுறுத்து. வடக்கு மாகாணத்தில் உரிமைகோரப்படாத காணிகளை அரசுடமையாக்கும் அரசாங்கத்தின் செயல் முறையற்றது எனவும் இது தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.வடபகுதியில் ஐயாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பது ஏக்கர் காணியினை கபளீகரம் செய்யப்படுவதை தடுத்து நிறுத்தும் முகமாக இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு வெற்றிலைக்கேணியில் நேற்றையதினம்(02) ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றது.இதன்போது அங்கு உரையாற்றும் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.கடந்த 28.03.2025ஆம் திகதி இடப்பட்ட வர்த்தமானியிலே மேற்படி ஏக்கர் காணியினை மூன்று மாதத்திற்குள் உரிமை கோரப்படாதவிடத்தில் அரச காணியாக அபகரிக்கப்படுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த வர்த்தமானி அறிவித்தலிலே யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்கிலேயே பிரதானமாக இந்த வர்த்தமானி பிரசுரத்தில் பல காணிகளை அடையாளப்படுத்தியிருக்கின்றது.இவ்வாறு தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அரசகாணியாக்குவதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. அதற்கு தமிழ் இங்குள்ள தமிழ் மக்களும் அனுமதிக்கக்கூடாது. இந்த அரசாங்கம் ஒருபக்கத்திலே காணிகளை விடுவிப்பதாக கூறிக்கொண்டு மறுபக்கத்தில் இதெல்லாம் கைவிடப்பட்ட காணிகள் தரிசு நிலங்கள் என தெரிவித்து அரச உடைமையாக்க முனைவது மிகவும் மோசமான செயற்பாடு. எனவே, அரசாங்கம் உடனடியாக இதை கைவிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.