நாட்டிலுள்ள 04 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அம்பர் நிறத்தில் முன்கூட்டிய மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இன்று (17) அதிகாலை 5.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் என குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, காலி மாவட்டத்தின் நெலுவ, யக்கலமுல்ல, நாகொட மற்றும் எல்பிட்டிய, களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்கல, ஹொரண, மத்துகம, இங்கிரிய, மாத்தறை மாவட்டத்தின் பிடபெத்தரட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, அலபாத, கலவான, அஹெலிய மற்றும் குருவிட்ட ஆகிய இடங்களுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட பிரதேசங்களிலும், கேகாலை மாவட்டத்தில் வரகாபொல, யட்டியந்தோட்டை, கேகாலை, தெரணியகல மற்றும் தெஹியோவிட்ட ஆகிய பகுதிகளிலும் முதல் மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, மாத்தறை மாவட்டத்தின் அத்துரலிய பிரதேசம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மடுல்ல மற்றும் நிவித்திகல ஆகிய பகுதிகளுக்கும் முதல் நிலை எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நாட்டிலுள்ள 04 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அம்பர் நிறத்தில் முன்கூட்டிய மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.இன்று (17) அதிகாலை 5.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் என குறிப்பிட்டுள்ளது.இதன்படி, காலி மாவட்டத்தின் நெலுவ, யக்கலமுல்ல, நாகொட மற்றும் எல்பிட்டிய, களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்கல, ஹொரண, மத்துகம, இங்கிரிய, மாத்தறை மாவட்டத்தின் பிடபெத்தரட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, அலபாத, கலவான, அஹெலிய மற்றும் குருவிட்ட ஆகிய இடங்களுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட பிரதேசங்களிலும், கேகாலை மாவட்டத்தில் வரகாபொல, யட்டியந்தோட்டை, கேகாலை, தெரணியகல மற்றும் தெஹியோவிட்ட ஆகிய பகுதிகளிலும் முதல் மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.அதேவேளை, மாத்தறை மாவட்டத்தின் அத்துரலிய பிரதேசம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மடுல்ல மற்றும் நிவித்திகல ஆகிய பகுதிகளுக்கும் முதல் நிலை எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.