• Nov 14 2024

மக்களே அவதானம்- மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

Tamil nila / Nov 2nd 2024, 7:36 pm
image

பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை நீடிக்க தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இரண்டு கட்டங்களின் கீழ் களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்கள, கண்டி மாவட்டத்தின் உடபலாத்த, யட்டிநுவர கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய, மாவனெல்ல,  தெஹியோவிட்ட, மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட, இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, எஹலியகொட, எலபாத்த, குருவிட, கஹவத்த, கொடகவெல, பெல்மடுல்ல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள மக்கள் இரண்டாம் கட்டத்தின் கீழ் 'அவதானமாக இருக்குமாறு' கேட்டுக்கொண்டுள்ளது.

பதுளை மாவட்டத்தில் வெலிமடை மற்றும் ஹல்துமுல்ல, காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, கேகாலை மாவட்டத்தில் வரகாபொல மற்றும் யட்டியாந்தோட்டை, குருநாகல் மாவட்டத்தில் பொல்கஹவெல, மாத்தறை மாவட்டத்தில் கொட்டபொல மற்றும் அக்குரஸ்ஸ, இரத்தினபுரி மாவட்டத்தில் நிவித்திகல, அயகம, பலாங்கொட, இம்புல்பே, ஓபநாயக்க, கிரியெல்ல மற்றும் கலவானை ஆகிய பிரிவுகளில் உள்ளளோர் முதல் கட்டத்தின் கீழ் 'விழிப்புணர்வுடன் இருக்கமாறும்' கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மலைப்பகுதிகளுக்கு அருகில் குறிப்பிட்ட அளவு மழை பெய்து வருவதால், அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மக்களே அவதானம்- மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை நீடிக்க தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.இரண்டு கட்டங்களின் கீழ் களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்கள, கண்டி மாவட்டத்தின் உடபலாத்த, யட்டிநுவர கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய, மாவனெல்ல,  தெஹியோவிட்ட, மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட, இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, எஹலியகொட, எலபாத்த, குருவிட, கஹவத்த, கொடகவெல, பெல்மடுல்ல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள மக்கள் இரண்டாம் கட்டத்தின் கீழ் 'அவதானமாக இருக்குமாறு' கேட்டுக்கொண்டுள்ளது.பதுளை மாவட்டத்தில் வெலிமடை மற்றும் ஹல்துமுல்ல, காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, கேகாலை மாவட்டத்தில் வரகாபொல மற்றும் யட்டியாந்தோட்டை, குருநாகல் மாவட்டத்தில் பொல்கஹவெல, மாத்தறை மாவட்டத்தில் கொட்டபொல மற்றும் அக்குரஸ்ஸ, இரத்தினபுரி மாவட்டத்தில் நிவித்திகல, அயகம, பலாங்கொட, இம்புல்பே, ஓபநாயக்க, கிரியெல்ல மற்றும் கலவானை ஆகிய பிரிவுகளில் உள்ளளோர் முதல் கட்டத்தின் கீழ் 'விழிப்புணர்வுடன் இருக்கமாறும்' கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.மலைப்பகுதிகளுக்கு அருகில் குறிப்பிட்ட அளவு மழை பெய்து வருவதால், அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement