• Jul 20 2025

கடும் கற்றால் வீதியின் குறுக்கே வீழ்ந்த மரம்; வட்டவளையில் போக்குவரத்து பாதிப்பு

Chithra / Jul 20th 2025, 10:05 am
image

 

வட்டவளை அகரவத்தை ஊடாக வெளிஓயா வீதியில் மரமொன்று வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ளமையினால் குறித்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில்  கடும் கற்றுடன் கூடிய வானிலை நிலவி வருகின்ற நிலையில் இன்று (20) அதிகாலை வீசிய கடும் கற்றினால் சைபிரஸ் மரம் வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ளது.

இதனால் ஹட்டன், வட்டவளை அகரவத்தை ஊடாக வெளிஓயா வரையான பொதுப்போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

மரத்தை வெட்டி அகற்றிய பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

கடும் கற்றால் வீதியின் குறுக்கே வீழ்ந்த மரம்; வட்டவளையில் போக்குவரத்து பாதிப்பு  வட்டவளை அகரவத்தை ஊடாக வெளிஓயா வீதியில் மரமொன்று வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ளமையினால் குறித்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.நுவரெலியா மாவட்டத்தில்  கடும் கற்றுடன் கூடிய வானிலை நிலவி வருகின்ற நிலையில் இன்று (20) அதிகாலை வீசிய கடும் கற்றினால் சைபிரஸ் மரம் வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ளது.இதனால் ஹட்டன், வட்டவளை அகரவத்தை ஊடாக வெளிஓயா வரையான பொதுப்போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.மரத்தை வெட்டி அகற்றிய பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement