• Sep 22 2024

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..! samugammedia

Sharmi / Nov 20th 2023, 7:10 am
image

Advertisement

சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கேகாலை, கலிகமுவ மற்றும் அரநாயக்க ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீரற்ற காலநிலையுடன் மண்சரிவு அபாயம் காரணமாக புனித ஜோசப் கனிஷ்ட பெண்கள் கல்லூரி மற்றும் புனித மரியாள் தமிழ் கல்லூரி இன்று (20) மூடப்படும் என கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று (19ம் திகதி) இரவு, பலான பிரதேசத்தில் இருந்து புகையிரத பாதையில் பாறை சரிந்து விழுந்ததன் காரணமாக, மலையக புகையிரத பாதையில் இயங்கும் புகையிரதம் மீண்டும் தடைப்பட்டுள்ளது.

அத்துடன் கலகெதர பிரதேசத்தில் இருந்து கண்டி குருநாகல் பிரதான வீதிக்கு மண்மேடு ஒன்று வீழ்ந்துள்ளது.

இதன் காரணமாக கலகெதர 10 கால்வாய்க்கு அருகில் உள்ள வீதியின் போக்குவரத்து ஒரு வழிப்பாதையில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை. samugammedia சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, கேகாலை, கலிகமுவ மற்றும் அரநாயக்க ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை, சீரற்ற காலநிலையுடன் மண்சரிவு அபாயம் காரணமாக புனித ஜோசப் கனிஷ்ட பெண்கள் கல்லூரி மற்றும் புனித மரியாள் தமிழ் கல்லூரி இன்று (20) மூடப்படும் என கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, நேற்று (19ம் திகதி) இரவு, பலான பிரதேசத்தில் இருந்து புகையிரத பாதையில் பாறை சரிந்து விழுந்ததன் காரணமாக, மலையக புகையிரத பாதையில் இயங்கும் புகையிரதம் மீண்டும் தடைப்பட்டுள்ளது.அத்துடன் கலகெதர பிரதேசத்தில் இருந்து கண்டி குருநாகல் பிரதான வீதிக்கு மண்மேடு ஒன்று வீழ்ந்துள்ளது.இதன் காரணமாக கலகெதர 10 கால்வாய்க்கு அருகில் உள்ள வீதியின் போக்குவரத்து ஒரு வழிப்பாதையில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement