• Jan 07 2025

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Chithra / Dec 15th 2024, 8:34 am
image


நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதன்படி கண்டி, பதுளை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கை அறிவிப்பானது முதலாவது கட்டத்தின் கீழ் இன்று மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பதுளை மாவட்டத்தில்  எல்ல, பசறை, ஹாலிஎல, அப்புத்தளை பிரதேச செயலக பிரிவுகளுக்கும், 

கண்டி மாவட்டத்தில்  மெததும்பர, பாததும்பர பிரதேச செயலக  பிரிவுகளுக்கும்,

குருநாகல் மாவட்டத்தில்  ரிதீகம பிரதேச செயலக பிரிவுகளுக்கும்,

மாத்தளை  மாவட்டத்தில்  அம்பன்கஹ கோறளை, ரத்தொட்ட பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதேவேளை தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (15) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

மேலும் அந்த அமைப்பு மெதுவாக உருவாகி மேற்கு வடமேற்கு நோக்கி நகரும். அதன்பின்னர் அடுத்த 2 நாட்களுக்கு வடக்கே தமிழக கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது.

இந்த முறைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் கணிப்புகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு,

நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும்,

ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி கண்டி, பதுளை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த எச்சரிக்கை அறிவிப்பானது முதலாவது கட்டத்தின் கீழ் இன்று மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.பதுளை மாவட்டத்தில்  எல்ல, பசறை, ஹாலிஎல, அப்புத்தளை பிரதேச செயலக பிரிவுகளுக்கும், கண்டி மாவட்டத்தில்  மெததும்பர, பாததும்பர பிரதேச செயலக  பிரிவுகளுக்கும்,குருநாகல் மாவட்டத்தில்  ரிதீகம பிரதேச செயலக பிரிவுகளுக்கும்,மாத்தளை  மாவட்டத்தில்  அம்பன்கஹ கோறளை, ரத்தொட்ட பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (15) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.மேலும் அந்த அமைப்பு மெதுவாக உருவாகி மேற்கு வடமேற்கு நோக்கி நகரும். அதன்பின்னர் அடுத்த 2 நாட்களுக்கு வடக்கே தமிழக கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது.இந்த முறைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் கணிப்புகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு,நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும்,ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.மத்திய, சப்ரகமுவ, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement