• Nov 17 2024

கேரளாவில் மண்சரிவு - 43 பேர் பலி, மேலும் பலரை காணவில்லை

Anaath / Jul 30th 2024, 1:38 pm
image

இந்தியாவின் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் இதுவரை 43 பேர் உயிரிழந்ததுடன்  நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கேரளாவில் கடந்த சில வாரங்ககளாக   தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இரண்டு நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. 

இன்று அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டதுடன் அதிகாலை 4.30 மணிக்கு 2-வதாக மற்றொரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. 

இதன் பின்னர் மீட்பு பனி நடவடிக்கையின் போதே குறித்த 43 பேரின்  சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில்  மீட்பு பணிகள்  பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், சூரமலையிலிருந்து முண்டக்கையை இணைக்கும் பாலமானது மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மீட்பு பணிகள் தாமதமாகி வருவதாக கேரள வனத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு துறை அமைச்சர் சசீந்திரன் கூறியுள்ளார்.

தென் மேற்கு பருவ பெயர்ச்சி மழை தீவிரமடைந்த நிலையில், கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று கடும் மழை பெய்துள்ளது.

இதையடுத்து, வயநாட்டில் மண்மேடுகள் சரிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

கேரளாவில் மண்சரிவு - 43 பேர் பலி, மேலும் பலரை காணவில்லை இந்தியாவின் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் இதுவரை 43 பேர் உயிரிழந்ததுடன்  நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கேரளாவில் கடந்த சில வாரங்ககளாக   தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இரண்டு நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டதுடன் அதிகாலை 4.30 மணிக்கு 2-வதாக மற்றொரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் பின்னர் மீட்பு பனி நடவடிக்கையின் போதே குறித்த 43 பேரின்  சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில்  மீட்பு பணிகள்  பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எனினும், சூரமலையிலிருந்து முண்டக்கையை இணைக்கும் பாலமானது மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மீட்பு பணிகள் தாமதமாகி வருவதாக கேரள வனத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு துறை அமைச்சர் சசீந்திரன் கூறியுள்ளார்.தென் மேற்கு பருவ பெயர்ச்சி மழை தீவிரமடைந்த நிலையில், கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று கடும் மழை பெய்துள்ளது.இதையடுத்து, வயநாட்டில் மண்மேடுகள் சரிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement