படுகொலை செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க விவகாரம் குறித்து புதிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய பரிசீலனை செய்யவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அத்துடன் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க விவகாரம் குறித்து ஒரு நாள் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்தத் தயார் என்றும் இன்று பாராளுமன்றத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
லசங்த விக்கிரமதுங்கவின் கொலை சம்பவத்தில் தற்போது அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை தெளிவுபடுத்துமாறும் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அனுப்பிவைத்துள்ள கடிதத்தை தொடர்ந்து எவ்வாறான நடவடிக்கைகளை பிரதமர் முன்னெடுத்துள்ளார் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வினவியிருந்தார்.
இதேநேரம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதிலளித்திருந்தார்.
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை சம்பவத்திற்கு உரிய நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என பிரதமர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் பல சாட்சியங்கள் உள்ளதாகவும் தாமும் அதற்குரிய பல்வேறுபட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
லசந்த விக்கிரமதுங்கவின் மகள் முன்வைத்த கோரிக்கையை தாம் விளங்கிக்கொள்வதாகவும் கட்டாயம் நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
சட்ட மா அதிபர் திணைக்களம் சுதந்திரமாக செயற்பட வேண்டும் எனவும் இந்த கொலைச் சம்பவத்திற்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதாகவும் மீண்டும் இது தொடர்பிலான விடங்களை ஆராய்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
லசந்த படுகொலை குறித்து புதிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய பரிசீலனை - பிரதமர் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க விவகாரம் குறித்து புதிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய பரிசீலனை செய்யவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.அத்துடன் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க விவகாரம் குறித்து ஒரு நாள் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்தத் தயார் என்றும் இன்று பாராளுமன்றத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார். லசங்த விக்கிரமதுங்கவின் கொலை சம்பவத்தில் தற்போது அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை தெளிவுபடுத்துமாறும் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அனுப்பிவைத்துள்ள கடிதத்தை தொடர்ந்து எவ்வாறான நடவடிக்கைகளை பிரதமர் முன்னெடுத்துள்ளார் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வினவியிருந்தார். இதேநேரம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதிலளித்திருந்தார். ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை சம்பவத்திற்கு உரிய நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என பிரதமர் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் பல சாட்சியங்கள் உள்ளதாகவும் தாமும் அதற்குரிய பல்வேறுபட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார். லசந்த விக்கிரமதுங்கவின் மகள் முன்வைத்த கோரிக்கையை தாம் விளங்கிக்கொள்வதாகவும் கட்டாயம் நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார். சட்ட மா அதிபர் திணைக்களம் சுதந்திரமாக செயற்பட வேண்டும் எனவும் இந்த கொலைச் சம்பவத்திற்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதாகவும் மீண்டும் இது தொடர்பிலான விடங்களை ஆராய்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.