• May 20 2024

மறைந்த நடனக்கலைஞர் மைக்கேல் ஜாக்சனின் முன்னாள் மனைவி திடீர் மரணம்- இரங்கல் தெரிவித்து வரும் திரைப்பிரபலங்கள்

keerthana / Jan 13th 2023, 1:25 pm
image

Advertisement

1968ம் ஆண்டு லிசா மேரி பிரெஸ்லி எல்விஸ் மற்றும் பிரிசில்லா பிரெஸ்லியின் ஒரே மகளாக பிறந்தவர் தான் லிசா மேரி பிரெஸ்லி.தந்தையை போல இசையில் ஈடுபாடு கொண்ட லிசா மேரி, 2000ம் ஆண்டு சொந்த ஆல்பங்களை வெளியிட்டார். 2003ம் ஆண்டு "டூம் இட் மே கன்சர்ன், அதைத் தொடர்ந்து "நவ் வாட்" பல ஆல்பங்களை பல ஆல்பங்களை வெளியிட்டு பல மேடை நிகழ்ச்சிகளில் தோன்றினார். 

நான்கு முறை திருமணம் செய்து கொண்ட லிசா மேரி, 1994 ம் ஆண்டு மைக்கேல் ஜாக்சனை திருமணம் செய்து கொண்டார். இரண்டு வருடம் அவருடன் வாழ்ந்த லிசா மேரி, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 1996ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து விட்டு நடிகர் நிக்கோலஸ் கேஜ்சை திருமணம் செய்து கொண்டார்.


நிக்கோலஸ் கேஜ்சுடன் வெறும் நான்கு மாதங்கள் வாழ்ந்த நிலையில் அவரையும் விவாகரத்து செய்தார். இதையடுத்து டேனி கீஃப் திருமணம் செய்து பின்னர் பிரிந்தார். நான்காவதாக கிட்டார் கலைஞரும் இசை தயாரிப்பாளருமான மைக்கேல் லாக்வுட்டுடன் இவருக்கு திருமணம் நடந்த நிலையில் அவரையும் 2021ம் ஆண்டு விவாகரத்து செய்தார். கணவர் டேனிக்கு பிறந்த தனது குழந்தைகளான நடிகர் ரிலே கியூஃப் மற்றும் பெஞ்சமின் கியூஃப் ஆகியோருடன் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்தார். 

இந்நிலையில், லிசா மேரி பிரெஸ்லிக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இவரது மரணத்தை அவரது தாயார் உறுதிப்படுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது அழகான மகள் லிசா மேரி எங்களை விட்டுச் சென்றுவிட்டார் என்ற செய்தியை கனத்த இதயத்துடன் நான் பகிர்ந்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஜனவரி 10ந் தேதி நடந்த கோல்டன் கோல்ப் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லிசா மேரி பிரெஸ்லி, சில நாட்களிலேயே உயிரிழந்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. லிசா மேரி பிரெஸ்லி மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இணையத்தின் வழியாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


மறைந்த நடனக்கலைஞர் மைக்கேல் ஜாக்சனின் முன்னாள் மனைவி திடீர் மரணம்- இரங்கல் தெரிவித்து வரும் திரைப்பிரபலங்கள் 1968ம் ஆண்டு லிசா மேரி பிரெஸ்லி எல்விஸ் மற்றும் பிரிசில்லா பிரெஸ்லியின் ஒரே மகளாக பிறந்தவர் தான் லிசா மேரி பிரெஸ்லி.தந்தையை போல இசையில் ஈடுபாடு கொண்ட லிசா மேரி, 2000ம் ஆண்டு சொந்த ஆல்பங்களை வெளியிட்டார். 2003ம் ஆண்டு "டூம் இட் மே கன்சர்ன், அதைத் தொடர்ந்து "நவ் வாட்" பல ஆல்பங்களை பல ஆல்பங்களை வெளியிட்டு பல மேடை நிகழ்ச்சிகளில் தோன்றினார். நான்கு முறை திருமணம் செய்து கொண்ட லிசா மேரி, 1994 ம் ஆண்டு மைக்கேல் ஜாக்சனை திருமணம் செய்து கொண்டார். இரண்டு வருடம் அவருடன் வாழ்ந்த லிசா மேரி, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 1996ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து விட்டு நடிகர் நிக்கோலஸ் கேஜ்சை திருமணம் செய்து கொண்டார்.நிக்கோலஸ் கேஜ்சுடன் வெறும் நான்கு மாதங்கள் வாழ்ந்த நிலையில் அவரையும் விவாகரத்து செய்தார். இதையடுத்து டேனி கீஃப் திருமணம் செய்து பின்னர் பிரிந்தார். நான்காவதாக கிட்டார் கலைஞரும் இசை தயாரிப்பாளருமான மைக்கேல் லாக்வுட்டுடன் இவருக்கு திருமணம் நடந்த நிலையில் அவரையும் 2021ம் ஆண்டு விவாகரத்து செய்தார். கணவர் டேனிக்கு பிறந்த தனது குழந்தைகளான நடிகர் ரிலே கியூஃப் மற்றும் பெஞ்சமின் கியூஃப் ஆகியோருடன் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்தார். இந்நிலையில், லிசா மேரி பிரெஸ்லிக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இவரது மரணத்தை அவரது தாயார் உறுதிப்படுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது அழகான மகள் லிசா மேரி எங்களை விட்டுச் சென்றுவிட்டார் என்ற செய்தியை கனத்த இதயத்துடன் நான் பகிர்ந்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஜனவரி 10ந் தேதி நடந்த கோல்டன் கோல்ப் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லிசா மேரி பிரெஸ்லி, சில நாட்களிலேயே உயிரிழந்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. லிசா மேரி பிரெஸ்லி மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இணையத்தின் வழியாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement