யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையின் ஏற்பாட்டில் சட்ட மாநாடானது இன்று காலை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கத்தில் ஆரம்பமானது.
இந்தியாவின் புகழ் பெற்ற சுரனா மற்றும் சுரனா சர்வதேச வழக்கறிஞர்கள் நிறுவனத்துடன் இணைந்து இன்று மற்றும் நாளை யாழ்ப்பாண சட்ட மாநாடு என்னும் பெயரிலான மாநாடு முன்னெடுக்கப்படுகின்றது.
அந்தவகையில், முதல் நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணமும் கௌரவ விருந்தினராக ஐக்கிய நாடுகளின் முன்னாள் நேருதவி செயலாளரும் சிறுவர் மற்றும் ஆயுத முரண்பாடு தொடர்பான செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியுமான கலாநிதி ராதிகா குமாரசுவாமி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதில், சிறப்பு நிகழ்வாக ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி கனகீஸ்வரன்,சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் சொர்ணராஜா ஆகியோரின் திறப்புரைகள் இடம்பெறவுள்ளன.
'இலங்கையில் பகிரங்க சட்டத்தின் எதிர்காலம்: நெருக்கடிகளும் சவால்களும்' என்னும் தலைப்பிலான கலந்துரையாடலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ் பல்கலையில் சட்ட மாநாடு ஆரம்பம்.முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்பு.samugammedia யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையின் ஏற்பாட்டில் சட்ட மாநாடானது இன்று காலை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கத்தில் ஆரம்பமானது.இந்தியாவின் புகழ் பெற்ற சுரனா மற்றும் சுரனா சர்வதேச வழக்கறிஞர்கள் நிறுவனத்துடன் இணைந்து இன்று மற்றும் நாளை யாழ்ப்பாண சட்ட மாநாடு என்னும் பெயரிலான மாநாடு முன்னெடுக்கப்படுகின்றது.அந்தவகையில், முதல் நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணமும் கௌரவ விருந்தினராக ஐக்கிய நாடுகளின் முன்னாள் நேருதவி செயலாளரும் சிறுவர் மற்றும் ஆயுத முரண்பாடு தொடர்பான செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியுமான கலாநிதி ராதிகா குமாரசுவாமி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.இதில், சிறப்பு நிகழ்வாக ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி கனகீஸ்வரன்,சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் சொர்ணராஜா ஆகியோரின் திறப்புரைகள் இடம்பெறவுள்ளன.'இலங்கையில் பகிரங்க சட்டத்தின் எதிர்காலம்: நெருக்கடிகளும் சவால்களும்' என்னும் தலைப்பிலான கலந்துரையாடலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.