• Feb 04 2025

செலவினங்களை சமர்ப்பிக்காத 13 ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு!

Chithra / Feb 4th 2025, 8:14 am
image

 

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளைக் கையளிக்காத 13 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். 

இதில் 3 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், 10 சுயேச்சை குழுக்களின் வேட்பாளர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

அதேநேரம், பொதுத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் 1064 பேர் வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளைக் கையளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 

அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

செலவினங்களை சமர்ப்பிக்காத 13 ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு  கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளைக் கையளிக்காத 13 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதில் 3 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், 10 சுயேச்சை குழுக்களின் வேட்பாளர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், பொதுத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் 1064 பேர் வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளைக் கையளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement