• Nov 21 2024

ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்தார் சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய..!

Chithra / Jul 11th 2024, 1:29 pm
image

 

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியலில் வேட்பாளராகவும், 2020 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி கிருஷ்மால் வர்ணசூரிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய இலங்கை, ஹேக் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் 24 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவராவார்.

நாட்டின் 10 சிறந்த இளம் ஆளுமைகளில் ஒருவராகவும் அவர் பெயரிடப்பட்டிருந்தார்.

இந்நாட்டில் திறமையான சட்டத்தரணிகளில் ஒருவராக திகழ்ந்து வரும் அவர் சட்டத்துறையில் பரந்துபட்ட அறிவைக் கொண்டுள்ளதன் காரணமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நன்மதிப்பை பெற்ற ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார்.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களான லலித் எல்லாவல மற்றும் கலாநிதி திலக் ராஜபக்ஷ ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாக இன்று தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்தார் சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய.  2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியலில் வேட்பாளராகவும், 2020 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி கிருஷ்மால் வர்ணசூரிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய இலங்கை, ஹேக் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் 24 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவராவார்.நாட்டின் 10 சிறந்த இளம் ஆளுமைகளில் ஒருவராகவும் அவர் பெயரிடப்பட்டிருந்தார்.இந்நாட்டில் திறமையான சட்டத்தரணிகளில் ஒருவராக திகழ்ந்து வரும் அவர் சட்டத்துறையில் பரந்துபட்ட அறிவைக் கொண்டுள்ளதன் காரணமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நன்மதிப்பை பெற்ற ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார்.இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களான லலித் எல்லாவல மற்றும் கலாநிதி திலக் ராஜபக்ஷ ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாக இன்று தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement