முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மூவருக்கு அரசாங்க பங்களாக்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், நீதித்துறை, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சுகளின் வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளன.
பத்து அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் வீடுகளை கையளிப்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட அரச பங்களாக்களின் எண்ணிக்கை ஐம்பது எனவும் கூறப்படுகின்றது.
பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், நீதித்துறை, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சு, அனைத்து அரசாங்க பங்களாக்களையும் உடனடியாக ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு அண்மையில் அறிவித்திருந்தது.
இதற்கமைய, பங்களாக்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பங்களாக்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மூவருக்கு அரசாங்க பங்களாக்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், நீதித்துறை, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சுகளின் வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளன.பத்து அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் வீடுகளை கையளிப்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட அரச பங்களாக்களின் எண்ணிக்கை ஐம்பது எனவும் கூறப்படுகின்றது.பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், நீதித்துறை, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சு, அனைத்து அரசாங்க பங்களாக்களையும் உடனடியாக ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு அண்மையில் அறிவித்திருந்தது.இதற்கமைய, பங்களாக்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.