• Feb 03 2026

பொது இடங்களில் வெற்றிலை துப்பினால் சட்ட நடவடிக்கை; போதைக்கு எதிராக களுவாஞ்சிகுடியில் அதிரடி நடவடிக்கை

Chithra / Feb 2nd 2026, 2:28 pm
image


மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட நகரப் பகுதிகளில் போதை பாவனைக்கு எதிராக தவிசாளரின் அதிரடியான செயற்பாடுகள் இன்று  மேற்கொள்ளப்பட்டது.


களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் உள்ள பொதுச் சந்தை மற்றும் பிரதான வீதியில் உள்ள கடைகள் போன்றவற்றிலே வெற்றிலை சப்பி மெல்லுவது, மது அருந்துவது, புகை பிடிப்பது போன்றவற்றை தடுக்கும் வகையில் விழிப்பூட்டப்பட்டது.


இன்று முதல் எவராயினும் இவ்வாறான போதை பாவனை செயற்பாடுகளிலே ஈடுபடுகின்றபோது பொது சுகாதார பரிசோதனை ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்க செய்யப்படும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. 


குறித்த செயற்பாட்டில் தவிசாளர் மே. வினோராஜ், பொது சுகாதார பரிசோதகர், பிரதேச சபையினுடைய உத்தியோகஸ்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டு மேற்படி விழிப்பூட்டல் சுவரொட்டிகளை காட்சிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.


பொது இடங்களில் வெற்றிலை துப்பினால் சட்ட நடவடிக்கை; போதைக்கு எதிராக களுவாஞ்சிகுடியில் அதிரடி நடவடிக்கை மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட நகரப் பகுதிகளில் போதை பாவனைக்கு எதிராக தவிசாளரின் அதிரடியான செயற்பாடுகள் இன்று  மேற்கொள்ளப்பட்டது.களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் உள்ள பொதுச் சந்தை மற்றும் பிரதான வீதியில் உள்ள கடைகள் போன்றவற்றிலே வெற்றிலை சப்பி மெல்லுவது, மது அருந்துவது, புகை பிடிப்பது போன்றவற்றை தடுக்கும் வகையில் விழிப்பூட்டப்பட்டது.இன்று முதல் எவராயினும் இவ்வாறான போதை பாவனை செயற்பாடுகளிலே ஈடுபடுகின்றபோது பொது சுகாதார பரிசோதனை ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்க செய்யப்படும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. குறித்த செயற்பாட்டில் தவிசாளர் மே. வினோராஜ், பொது சுகாதார பரிசோதகர், பிரதேச சபையினுடைய உத்தியோகஸ்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டு மேற்படி விழிப்பூட்டல் சுவரொட்டிகளை காட்சிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement