‘நத்தைக் காய்ச்சல்’ என அழைக்கப்படும் சிஸ்டோசோமியாசிஸ் என்ற ஒட்டுண்ணி நோய், தற்போது உருமாற்றம் அடைந்து புதிய ‘கலப்பின’ ஒட்டுண்ணிகளாக மாறி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மாற்றம் நோயைக் கட்டுப்படுத்துவதையும், சிகிச்சையளிப்பதையும் மேலும் சவாலானதாக மாற்றக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஒட்டுண்ணிகள் தோலின் வழியாக மனித உடலுக்குள் நுழைந்து, ரத்த நாளங்களில் மறைந்து வாழ்கின்றன.
பின்னர் அவை இடும் முட்டைகள் கல்லீரல், நுரையீரல் மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் தங்கிவிடுகின்றன.
பல ஆண்டுகளாக அறிகுறியின்றி உடலில் தங்கி, பின்னர் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மையும் இதில் காணப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் 250 மில்லியன் பேர் இந்த நோய்க்காக சிகிச்சை பெறுகின்றனர்.
பெரும்பாலான பாதிப்புகள் ஆப்ரிக்காவில் பதிவாகினாலும், சீனா, வெனிசுவேலா, இந்தோனீசியா உள்ளிட்ட 78 நாடுகளில் இந்த நோய் பரவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆய்வுகள், மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்கும் வெவ்வேறு ஒட்டுண்ணிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து, புதிய கலப்பின ஒட்டுண்ணிகளை உருவாக்கி வருவதை வெளிப்படுத்தியுள்ளன.
மாலவியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பரிசோதிக்கப்பட்ட ஒட்டுண்ணிகளில் 7 சதவீதம் கலப்பின மாற்றுருக்கள் என கண்டறியப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த கலப்பின ஒட்டுண்ணிகள் மனிதர்களின் இனப்பெருக்க உறுப்புகளைப் பாதிக்கும் தன்மை கொண்டவை என்றும், முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பிறப்புறுப்பு புண்கள், மலட்டுத்தன்மை மற்றும் எச்.ஐ.வி தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஷ
குறிப்பாக பெண்களுக்கான சமூக மற்றும் இனப்பெருக்க விளைவுகள் மிகவும் தீவிரமானவையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
காலநிலை மாற்றம், மக்கள் இடப்பெயர்வு மற்றும் பயணங்கள் ஆகியவை இந்த நோய் புதிய பகுதிகளுக்கு பரவுவதற்கு காரணமாக உள்ளன. இதன் காரணமாக, உலக சுகாதார அமைப்பு இதனை “உலகளாவிய கவலைக்குரிய விஷயம்” என அறிவித்துள்ளது.
இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள, விலங்குகளிடமும் நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டுள்ளது.
2006 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில், ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து திட்டங்களால் நத்தைக் காய்ச்சல் பாதிப்புகள் 60 சதவீதம் வரை குறைந்துள்ளன. இருப்பினும், இந்த முன்னேற்றத்தைத் தொடர நிதி உதவி அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிஸ்டோசோமியாசிஸ் ஒட்டுண்ணி ‘கலப்பின’ ஒட்டுண்ணியாகும் அபாயம் ‘நத்தைக் காய்ச்சல்’ என அழைக்கப்படும் சிஸ்டோசோமியாசிஸ் என்ற ஒட்டுண்ணி நோய், தற்போது உருமாற்றம் அடைந்து புதிய ‘கலப்பின’ ஒட்டுண்ணிகளாக மாறி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த மாற்றம் நோயைக் கட்டுப்படுத்துவதையும், சிகிச்சையளிப்பதையும் மேலும் சவாலானதாக மாற்றக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.இந்த ஒட்டுண்ணிகள் தோலின் வழியாக மனித உடலுக்குள் நுழைந்து, ரத்த நாளங்களில் மறைந்து வாழ்கின்றன. பின்னர் அவை இடும் முட்டைகள் கல்லீரல், நுரையீரல் மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் தங்கிவிடுகின்றன. பல ஆண்டுகளாக அறிகுறியின்றி உடலில் தங்கி, பின்னர் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மையும் இதில் காணப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் 250 மில்லியன் பேர் இந்த நோய்க்காக சிகிச்சை பெறுகின்றனர். பெரும்பாலான பாதிப்புகள் ஆப்ரிக்காவில் பதிவாகினாலும், சீனா, வெனிசுவேலா, இந்தோனீசியா உள்ளிட்ட 78 நாடுகளில் இந்த நோய் பரவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.சமீபத்திய ஆய்வுகள், மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்கும் வெவ்வேறு ஒட்டுண்ணிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து, புதிய கலப்பின ஒட்டுண்ணிகளை உருவாக்கி வருவதை வெளிப்படுத்தியுள்ளன. மாலவியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பரிசோதிக்கப்பட்ட ஒட்டுண்ணிகளில் 7 சதவீதம் கலப்பின மாற்றுருக்கள் என கண்டறியப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இந்த கலப்பின ஒட்டுண்ணிகள் மனிதர்களின் இனப்பெருக்க உறுப்புகளைப் பாதிக்கும் தன்மை கொண்டவை என்றும், முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பிறப்புறுப்பு புண்கள், மலட்டுத்தன்மை மற்றும் எச்.ஐ.வி தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஷ குறிப்பாக பெண்களுக்கான சமூக மற்றும் இனப்பெருக்க விளைவுகள் மிகவும் தீவிரமானவையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.காலநிலை மாற்றம், மக்கள் இடப்பெயர்வு மற்றும் பயணங்கள் ஆகியவை இந்த நோய் புதிய பகுதிகளுக்கு பரவுவதற்கு காரணமாக உள்ளன. இதன் காரணமாக, உலக சுகாதார அமைப்பு இதனை “உலகளாவிய கவலைக்குரிய விஷயம்” என அறிவித்துள்ளது.இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள, விலங்குகளிடமும் நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டுள்ளது.2006 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில், ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து திட்டங்களால் நத்தைக் காய்ச்சல் பாதிப்புகள் 60 சதவீதம் வரை குறைந்துள்ளன. இருப்பினும், இந்த முன்னேற்றத்தைத் தொடர நிதி உதவி அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.