சர்வதேச அரங்கில் அமெரிக்க டாலரின் மதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவதாகும் நிலையில், சீனா தனது ‘யுவான்’ (Yuan) நாணயத்தை உலகளாவிய அளவில் ஒரு வலுவான சக்தியாக மாற்றப்போவதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார்.
பல நாடுகள் தங்கத்தை அதிக அளவில் வாங்கி குவித்து வருவதால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை புதிய உச்சங்களைத் தொட்டு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், சர்வதேச அரங்கில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கில், சீனாவின் ‘யுவான்’ நாணயத்தை உலக வர்த்தகத்தில் முக்கிய நாணயமாக மாற்றும் முயற்சிகளை சீனா தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ள சீனா, டாலர் சார்பை குறைக்கும் வகையில், சர்வதேச வர்த்தகத்தில் யுவானின் பயன்பாட்டை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு, சீனாவின் 6.2 டிரில்லியன் டாலர் மதிப்பிலான வெளிநாட்டு வர்த்தகத்தில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு உள்ளூர் நாணயமான யுவானில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ இதழில் வெளியான கட்டுரையில், சீனாவின் நிதித் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்துவதன் மூலம், யுவானை சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் முக்கிய நாணயமாக நிலைநிறுத்த வேண்டும் என ஜனாதிபதி ஜி ஜின்பிங் வலியுறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க டாலரின் ஆதிக்கம்: சீனா விடுத்த சவால் சர்வதேச அரங்கில் அமெரிக்க டாலரின் மதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவதாகும் நிலையில், சீனா தனது ‘யுவான்’ (Yuan) நாணயத்தை உலகளாவிய அளவில் ஒரு வலுவான சக்தியாக மாற்றப்போவதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார்.பல நாடுகள் தங்கத்தை அதிக அளவில் வாங்கி குவித்து வருவதால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை புதிய உச்சங்களைத் தொட்டு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், சர்வதேச அரங்கில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கில், சீனாவின் ‘யுவான்’ நாணயத்தை உலக வர்த்தகத்தில் முக்கிய நாணயமாக மாற்றும் முயற்சிகளை சீனா தீவிரப்படுத்தியுள்ளது.அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ள சீனா, டாலர் சார்பை குறைக்கும் வகையில், சர்வதேச வர்த்தகத்தில் யுவானின் பயன்பாட்டை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கடந்த ஆண்டு, சீனாவின் 6.2 டிரில்லியன் டாலர் மதிப்பிலான வெளிநாட்டு வர்த்தகத்தில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு உள்ளூர் நாணயமான யுவானில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ இதழில் வெளியான கட்டுரையில், சீனாவின் நிதித் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்துவதன் மூலம், யுவானை சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் முக்கிய நாணயமாக நிலைநிறுத்த வேண்டும் என ஜனாதிபதி ஜி ஜின்பிங் வலியுறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.