பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு எதிராக மின்சார சபை செயற்பட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் நாட்டு பிரஜைகளுக்கு உண்டு என ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் குடியரசின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கை மின்சார சபை 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் செயற்பட்ட விதத்தில் தான் தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகத்திலும் செயற்படுகிறது.
மின்கட்டணம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு எடுத்த தீர்மானம் குறித்து நிதியமைச்சின் ஆலோசனைகளை பெற வேண்டும் அல்லது சட்டமா அதிபரின் ஆலோசனை பெற வேண்டும் என் மின்சார சபை குறிப்பிட்டுள்ளமை கவலைக்குரியது.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க சட்டத்தின் பிரகாரம் செயற்பட்ட போது அப்போதைய அரசாங்கம் தனது பெரும்பான்மையை பயன்படுத்தி அவரை பதவி நீக்கியது.
இலங்கை மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தை கருத்திற் கொள்ளாமல் செயற்படுவது தவறானதொரு எடுத்துக்காட்டாகும்.
ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்தில் மூன்றில் ஒரு பங்கு என்ற அடிப்படையில் மின்கட்டணத்தை குறைப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தார்.
33 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைப்பதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் தற்போது 20 சதவீதத்தால் மின்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் நிதி நிலைமை தொடர்பில் மின்சார சபை குறிப்பிடும் தரவுகள் முற்றிலும் பொய்யானது.
மின்சார சபையின் வருமானம் குறித்து கணக்காய்வு செய்தால் உண்மையை அனைவரும் அறிந்துக் கொள்ளலாம். என அவர் மேலும் தெரிவித்தார்.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டால் சட்ட நடவடிக்கை மின்சார சபையை எச்சரித்த சம்பிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு எதிராக மின்சார சபை செயற்பட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் நாட்டு பிரஜைகளுக்கு உண்டு என ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் குடியரசின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இலங்கை மின்சார சபை 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் செயற்பட்ட விதத்தில் தான் தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகத்திலும் செயற்படுகிறது.மின்கட்டணம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு எடுத்த தீர்மானம் குறித்து நிதியமைச்சின் ஆலோசனைகளை பெற வேண்டும் அல்லது சட்டமா அதிபரின் ஆலோசனை பெற வேண்டும் என் மின்சார சபை குறிப்பிட்டுள்ளமை கவலைக்குரியது. இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க சட்டத்தின் பிரகாரம் செயற்பட்ட போது அப்போதைய அரசாங்கம் தனது பெரும்பான்மையை பயன்படுத்தி அவரை பதவி நீக்கியது.இலங்கை மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தை கருத்திற் கொள்ளாமல் செயற்படுவது தவறானதொரு எடுத்துக்காட்டாகும்.ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்தில் மூன்றில் ஒரு பங்கு என்ற அடிப்படையில் மின்கட்டணத்தை குறைப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தார். 33 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைப்பதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் தற்போது 20 சதவீதத்தால் மின்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் நிதி நிலைமை தொடர்பில் மின்சார சபை குறிப்பிடும் தரவுகள் முற்றிலும் பொய்யானது.மின்சார சபையின் வருமானம் குறித்து கணக்காய்வு செய்தால் உண்மையை அனைவரும் அறிந்துக் கொள்ளலாம். என அவர் மேலும் தெரிவித்தார்.