• Nov 26 2024

வனப்பகுதிக்குள் நுழைந்தால் சட்ட நடவடிக்கை - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை..!

Chithra / Feb 20th 2024, 3:14 pm
image

 

அனுமதியின்றி வனப்பகுதிகளுக்குள் பிரவேசிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனப்பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் நிஷாந்த எதிரிசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

வனப்பகுதிகளில் இடம்பெறும் தீப்பரவல் சம்பவங்கள் காரணமாக, அனுமதியின்றி வனப்பகுதிகளுக்குள் பிரவேசிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அண்மைக்காலமாக நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக கண்டி, 

மாத்தளை, நுவரெலியா, பதுளை ஆகிய பகுதிகளில் உள்ள வனங்களில் தீப்பரவல் ஏற்பட்டு வருகின்றது என 

 அவர் தெரிவித்துள்ளார்.

வனப்பகுதிக்குள் நுழைந்தால் சட்ட நடவடிக்கை - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை.  அனுமதியின்றி வனப்பகுதிகளுக்குள் பிரவேசிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனப்பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் நிஷாந்த எதிரிசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,வனப்பகுதிகளில் இடம்பெறும் தீப்பரவல் சம்பவங்கள் காரணமாக, அனுமதியின்றி வனப்பகுதிகளுக்குள் பிரவேசிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.அத்துடன் அண்மைக்காலமாக நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை ஆகிய பகுதிகளில் உள்ள வனங்களில் தீப்பரவல் ஏற்பட்டு வருகின்றது என  அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement