• Jan 13 2025

பொதுத் தேர்தல் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவு

Chithra / Jan 9th 2025, 8:05 am
image

 

2024 பொதுத் தேர்தல் மற்றும் அது தொடர்பான தேர்தல்களில் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை  ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதன்படி, இதுவரை வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 1042 வேட்பாளர்கள் மற்றும் 197 கட்சி செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழு தலைவர்கள் தொடர்பான விரிவான அறிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது.

எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர், பிரிவுக்கு பொறுப்பான அதிகாரிகள் மேற்படி விசாரணைகள் தொடர்பான சாரங்களை தயாரித்து சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்குமாறு, 

பதில் பொலிஸ்மா அதிபர் ஊடாக அனைத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவு  2024 பொதுத் தேர்தல் மற்றும் அது தொடர்பான தேர்தல்களில் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை  ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.இதன்படி, இதுவரை வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 1042 வேட்பாளர்கள் மற்றும் 197 கட்சி செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழு தலைவர்கள் தொடர்பான விரிவான அறிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது.எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர், பிரிவுக்கு பொறுப்பான அதிகாரிகள் மேற்படி விசாரணைகள் தொடர்பான சாரங்களை தயாரித்து சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்குமாறு, பதில் பொலிஸ்மா அதிபர் ஊடாக அனைத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement