• Oct 19 2024

முறையற்ற வகையில் கலாநிதி மற்றும் பேராசிரியர் பட்டங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க சட்ட ஏற்பாடு! samugammedia

Tamil nila / May 2nd 2023, 8:06 pm
image

Advertisement

பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் இடம்பெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பு மற்றும் உயர்கல்வி தொடர்பான பல பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை அழைத்திருந்தது.

இதன்போது கோப் குழுவினால் கவனம் செலுத்தப்பட்ட பிரதான 10 விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளை பின்பற்றுவது தொடர்பான சிக்கல்கள்

Z புள்ளி முறைமைக்கு மேலதிகமாக ஒரு சில பாடங்களுக்கு நடைமுறைப் பரீட்சை நடத்துவதால் உயர்ந்த Z புள்ளிகளைக் கொண்ட ஒரு சில மாணவர்களுக்கு இடம்பெறும் அநீதி

பல்கலைக்கழ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு வருகையை உறுதிப்படுத்தும் சரியான முறைமையொன்று இல்லாமை

முறையான ஒழுங்குபடுத்தல் இல்லாமை காரணமாக சட்டவிரோதமாக கலாநிதி மற்றும் பேராசிரியர் பட்டங்களைப் பயன்படுத்தல்

தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களால் வழங்கப்படும் பட்டங்கள் தொடர்பான ஒழுங்குவிதி

தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பின் தரத்தை உயர்த்துதல் மற்றும் தொழிற் சந்தைக்குப் பொருத்தமான வகையில் பாடநெறிகளை தயாரிப்பதன் அவசியம்

பல்கலைக்கழ சேமலாப நிதியம் (UPF) தவறாகப் பயன்படுத்துவதால் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதன் அவசியம்

பல்கலைக்கழக கட்டமைப்பின் மனிதவளத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் புரிந்துணர்வுடன் செயற்படுதல்

அதிகமான வெளிநாட்டு மாணவர்களை கவரும் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவதன் அவசியம்

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உயர்தர விடைப்பத்திர மதிப்பீட்டிலிருந்து விலகியுள்ள நிலையில் அந்தப் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு சாதகமான தலையீடு செய்தல்

இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பின் தரத்தை உயர்த்துவது மற்றும் தொழிற் சந்தைக்கு ஏற்ற பட்டதாரிகளை உருவாக்குதல் தொடர்பில் குழுவின் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

2021 இல் பல்கலைக்கழக நுழைவு கிடைக்கும் 26 வீதமானவர்கள் கலைத்துறையில் உயர்தரத்துக்கு தோற்றியவர்கள் என்றும் விஞ்ஞானத் துறையில் பல்கலைக்கழகத்துக்கு பிரவேசிப்பவர்கள் ஒப்பீட்டளவில் குறைவாகும் எனவும் இதன்போது புலப்பட்டது.

எனினும் அபிவிருத்தியடைந்த நாடுகளில் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத் துறையில் பல்கலைக்கழகம் பிரவேசிப்பவர்கள் அதிகம் எனச் சுட்டிக்காட்டிய குழு இந்தநிலையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியது.

இந்நாட்டில் உயர்தரத்தைக் கொண்ட பாடசாலைகள் 2952 உள்ளன எனவும், அவற்றில் 1011 பாடசாலைகளில் மாத்திரமே விஞ்ஞானத் துறையில் கற்க முடியும் எனவும், 1941 பாடசாலைகளில் விஞ்ஞானத் துறையில் கற்பித்தல் இடம்பெறுவதில்லை என்றும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

இதுதொடர்பில் விரைவாகத் தலையிட்டு உயர்கல்விக்கு விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத் துறையில் அதிக மாணவர்களை அனுப்புவதற்குத் தேவையான வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை நீக்குவதற்குப் பதிலாக, தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு ஆணைக்குழுவை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை குழு சுட்டிக்காட்டியது.

உயர்கல்விக்காக வெளிநாடு சென்று திரும்பிவராத விரிவுரையாளர்களிடமிருந்து கிட்டத்தட்ட 2 பில்லியன் ரூபாய் அறவிட வேண்டும் என்பது இதன்போது தெரியவந்தது. இத்தொகையை உரிய உத்தரவாதம் வழங்கியவர்களிடமிருந்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இவ்வாறு வெளிநாடு சென்ற 617 ஆசிரியர்களில் 84 பேரே இதுவரை உரிய கொடுப்பனவுகளை செய்துள்ளதாக தெரியவந்தது. அதன்படி, இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒரு மாதத்துக்குள் கோப் குழுவுக்கு அறிவிக்குமாறு குழு பரிந்துரைத்தது.

முறையற்ற வகையில் கலாநிதி மற்றும் பேராசிரியர் பட்டங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க சட்ட ஏற்பாடு samugammedia பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் இடம்பெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பு மற்றும் உயர்கல்வி தொடர்பான பல பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை அழைத்திருந்தது.இதன்போது கோப் குழுவினால் கவனம் செலுத்தப்பட்ட பிரதான 10 விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளை பின்பற்றுவது தொடர்பான சிக்கல்கள்Z புள்ளி முறைமைக்கு மேலதிகமாக ஒரு சில பாடங்களுக்கு நடைமுறைப் பரீட்சை நடத்துவதால் உயர்ந்த Z புள்ளிகளைக் கொண்ட ஒரு சில மாணவர்களுக்கு இடம்பெறும் அநீதிபல்கலைக்கழ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு வருகையை உறுதிப்படுத்தும் சரியான முறைமையொன்று இல்லாமைமுறையான ஒழுங்குபடுத்தல் இல்லாமை காரணமாக சட்டவிரோதமாக கலாநிதி மற்றும் பேராசிரியர் பட்டங்களைப் பயன்படுத்தல்தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களால் வழங்கப்படும் பட்டங்கள் தொடர்பான ஒழுங்குவிதிதேசிய பல்கலைக்கழக கட்டமைப்பின் தரத்தை உயர்த்துதல் மற்றும் தொழிற் சந்தைக்குப் பொருத்தமான வகையில் பாடநெறிகளை தயாரிப்பதன் அவசியம்பல்கலைக்கழ சேமலாப நிதியம் (UPF) தவறாகப் பயன்படுத்துவதால் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதன் அவசியம்பல்கலைக்கழக கட்டமைப்பின் மனிதவளத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் புரிந்துணர்வுடன் செயற்படுதல்அதிகமான வெளிநாட்டு மாணவர்களை கவரும் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவதன் அவசியம்பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உயர்தர விடைப்பத்திர மதிப்பீட்டிலிருந்து விலகியுள்ள நிலையில் அந்தப் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு சாதகமான தலையீடு செய்தல்இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பின் தரத்தை உயர்த்துவது மற்றும் தொழிற் சந்தைக்கு ஏற்ற பட்டதாரிகளை உருவாக்குதல் தொடர்பில் குழுவின் விசேட கவனம் செலுத்தப்பட்டது.2021 இல் பல்கலைக்கழக நுழைவு கிடைக்கும் 26 வீதமானவர்கள் கலைத்துறையில் உயர்தரத்துக்கு தோற்றியவர்கள் என்றும் விஞ்ஞானத் துறையில் பல்கலைக்கழகத்துக்கு பிரவேசிப்பவர்கள் ஒப்பீட்டளவில் குறைவாகும் எனவும் இதன்போது புலப்பட்டது.எனினும் அபிவிருத்தியடைந்த நாடுகளில் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத் துறையில் பல்கலைக்கழகம் பிரவேசிப்பவர்கள் அதிகம் எனச் சுட்டிக்காட்டிய குழு இந்தநிலையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியது.இந்நாட்டில் உயர்தரத்தைக் கொண்ட பாடசாலைகள் 2952 உள்ளன எனவும், அவற்றில் 1011 பாடசாலைகளில் மாத்திரமே விஞ்ஞானத் துறையில் கற்க முடியும் எனவும், 1941 பாடசாலைகளில் விஞ்ஞானத் துறையில் கற்பித்தல் இடம்பெறுவதில்லை என்றும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.இதுதொடர்பில் விரைவாகத் தலையிட்டு உயர்கல்விக்கு விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத் துறையில் அதிக மாணவர்களை அனுப்புவதற்குத் தேவையான வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை நீக்குவதற்குப் பதிலாக, தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு ஆணைக்குழுவை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை குழு சுட்டிக்காட்டியது.உயர்கல்விக்காக வெளிநாடு சென்று திரும்பிவராத விரிவுரையாளர்களிடமிருந்து கிட்டத்தட்ட 2 பில்லியன் ரூபாய் அறவிட வேண்டும் என்பது இதன்போது தெரியவந்தது. இத்தொகையை உரிய உத்தரவாதம் வழங்கியவர்களிடமிருந்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.இவ்வாறு வெளிநாடு சென்ற 617 ஆசிரியர்களில் 84 பேரே இதுவரை உரிய கொடுப்பனவுகளை செய்துள்ளதாக தெரியவந்தது. அதன்படி, இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒரு மாதத்துக்குள் கோப் குழுவுக்கு அறிவிக்குமாறு குழு பரிந்துரைத்தது.

Advertisement

Advertisement

Advertisement