• May 18 2025

இனப்படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளை நினைவுகூற முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்கள் தேசமாக திரள்வோம்;யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு..!

Sharmi / May 17th 2025, 11:09 pm
image

இனப்படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளை நினைவுகூற முள்ளிவாய்க்கால் மண்ணில் வடகிழக்கு வாழ் தமிழர்கள் தேசமாக திரள வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தயாபரன் லகிர்தர் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவேந்தல் ஏற்பாடுகளில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இனப்படுகொலை செய்யபட்ட இந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் நாளைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒழுங்கமைப்புக்களை மேற்கொள்வதற்காக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக வருகை தந்துள்ளோம்.

நாளையுடன் எமது இனம் இனப்படுகொலை செய்யபட்டு 16 ஆண்டுகள் நிறைவடைகின்றது .

தமிழ் மக்களாக அனைத்து ஈழத் தமிழர்களுக்கும் வரலாற்று கடமை உள்ளது .எமது இந்த வரலாறு அடுத்த கட்ட சந்ததிக்கு கடத்த படவேண்டும் .சர்வதேச சமூகத்திற்கு தொடர்ச்சியாக எமது வலிகளையும் வடுக்களையும் தொடர்ந்து நாம் கூறவேண்டும்

 அதனடிப்படையில் முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறவுள்ள உயிர்நீத்த எம் உறவுகளை நினைவு கூறும் நினைவேந்தலில் இளைஞர்களாக, யுவதிகளாக, தந்தையர்களாக ,தாய்மார்களாக, உறவுகளாக ,சமூக அமைப்புக்களாக, மாணவர்களாக தேசமாக முள்ளிவாய்க்கால் மண்ணிற்கு வடகிழக்கு தமிழர்கள் திரள வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக கேட்டுக்கொள்கிறோம்.

இந்த நாளில் களியாட்டஙகளில் கலந்து கொள்வதை தவிர்த்து எமது மண்ணில் எமது தாய் மொழியான தமிழ் மொழியை பேசினார்கள் என்பதற்காக ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள்.

உணர்வு சார்ந்த நிலைபாட்டில் அனைவரும் திரள வேண்டும் ஆகவே முள்ளிவாய்க்கால் மண்ணில் அனைவருடைய வருகையும் அவசியமானது .

அது மட்டுமன்றி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அடுத்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பில் ஓர் அங்கமாக இணைந்து செயற்படும் . தொடர்ந்து மாணவர்களாக எமது நினைவேந்தல் சார் பணிகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இனப்படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளை நினைவுகூற முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்கள் தேசமாக திரள்வோம்;யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு. இனப்படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளை நினைவுகூற முள்ளிவாய்க்கால் மண்ணில் வடகிழக்கு வாழ் தமிழர்கள் தேசமாக திரள வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தயாபரன் லகிர்தர் தெரிவித்தார்.முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவேந்தல் ஏற்பாடுகளில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இனப்படுகொலை செய்யபட்ட இந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் நாளைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒழுங்கமைப்புக்களை மேற்கொள்வதற்காக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக வருகை தந்துள்ளோம்.நாளையுடன் எமது இனம் இனப்படுகொலை செய்யபட்டு 16 ஆண்டுகள் நிறைவடைகின்றது .தமிழ் மக்களாக அனைத்து ஈழத் தமிழர்களுக்கும் வரலாற்று கடமை உள்ளது .எமது இந்த வரலாறு அடுத்த கட்ட சந்ததிக்கு கடத்த படவேண்டும் .சர்வதேச சமூகத்திற்கு தொடர்ச்சியாக எமது வலிகளையும் வடுக்களையும் தொடர்ந்து நாம் கூறவேண்டும் அதனடிப்படையில் முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறவுள்ள உயிர்நீத்த எம் உறவுகளை நினைவு கூறும் நினைவேந்தலில் இளைஞர்களாக, யுவதிகளாக, தந்தையர்களாக ,தாய்மார்களாக, உறவுகளாக ,சமூக அமைப்புக்களாக, மாணவர்களாக தேசமாக முள்ளிவாய்க்கால் மண்ணிற்கு வடகிழக்கு தமிழர்கள் திரள வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக கேட்டுக்கொள்கிறோம்.இந்த நாளில் களியாட்டஙகளில் கலந்து கொள்வதை தவிர்த்து எமது மண்ணில் எமது தாய் மொழியான தமிழ் மொழியை பேசினார்கள் என்பதற்காக ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள்.உணர்வு சார்ந்த நிலைபாட்டில் அனைவரும் திரள வேண்டும் ஆகவே முள்ளிவாய்க்கால் மண்ணில் அனைவருடைய வருகையும் அவசியமானது .அது மட்டுமன்றி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அடுத்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பில் ஓர் அங்கமாக இணைந்து செயற்படும் . தொடர்ந்து மாணவர்களாக எமது நினைவேந்தல் சார் பணிகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement