"அரசியல் கைதிகள் என்று சொல்லப்படுபவர்களை வைத்து அரசியல் நடத்த இடமளிக்கமாட்டோம். அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்போம்." - என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"அரசியல் கைதிகள் என்று சொல்லப்படுபவர்கள் தொடர்பில் நீதி அமைச்சர் தெரிவித்த கருத்தை சிலர் மீண்டும் அரசியலாக்கியுள்ளனர். உண்மையில் நீதிமன்ற வழக்குகளில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு தமிழர்களைத்தான் அரசியல் கைதிகள் என்று ஒரு தரப்பினரும், புலிகள் அமைப்பின் சந்தேகநபர்கள் என்று இன்னொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
அப்படியானவர்களில் 10 பேர் வரை தற்போது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான வழக்குகளை ஆராய்ந்து அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். எனவே, அரசியல் கைதிகள் என்று சொல்லப்படுபவர்களை வைத்து அரசியல் நடத்த இடமளிக்கமாட்டோம்." - என்றார்.
அரசியல் கைதிகளை வைத்து அரசியல் நடத்த இடமளியோம் - - அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் அரசு உறுதி "அரசியல் கைதிகள் என்று சொல்லப்படுபவர்களை வைத்து அரசியல் நடத்த இடமளிக்கமாட்டோம். அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்போம்." - என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,"அரசியல் கைதிகள் என்று சொல்லப்படுபவர்கள் தொடர்பில் நீதி அமைச்சர் தெரிவித்த கருத்தை சிலர் மீண்டும் அரசியலாக்கியுள்ளனர். உண்மையில் நீதிமன்ற வழக்குகளில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு தமிழர்களைத்தான் அரசியல் கைதிகள் என்று ஒரு தரப்பினரும், புலிகள் அமைப்பின் சந்தேகநபர்கள் என்று இன்னொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.அப்படியானவர்களில் 10 பேர் வரை தற்போது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான வழக்குகளை ஆராய்ந்து அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். எனவே, அரசியல் கைதிகள் என்று சொல்லப்படுபவர்களை வைத்து அரசியல் நடத்த இடமளிக்கமாட்டோம்." - என்றார்.