நெடுந்தீவு மண்ணையும் மக்களையும் நிலைபேறான அபிவிருத்தப் பாதையிலே இட்டுச் செல்வதற்காக நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் "மீண்டும் ஊருக்குப் போகலாம்" என்ற தொனிப்பொருளில் நெடுவூர்த் திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 10 ஆம் திகதிவரை நெடுந்தீவு மண்ணிலே நடத்துவதற்காக திட்டமிட்டுள்ளது.
குறித்த இந்த நிகழ்வு உலகம் முழுவதிலும் வாழும் எமது ஊர் சார்ந்த ஆர்வலர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு ஒன்று கூடலாக நெடுந்தீவு மண்ணிலே முன்னெடுக்கப்படவுள்ளது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்த நெடுந்தீவு மண் இன்று படிப்படியாக மக்கள் வெளியேறி மக்களற்ற பிரதேசமாக மாறக்கூடிய பேராபத்தை எதிர்நோக்கக்கூடிய கட்டத்திலுள்ளது.
நெடுந்தீவின் நிலைபேறான அபிவிருத்தி இந்த நிகழ்வின் பிரதான நோக்கமாக இருக்கிறது. நெடுந்தீவிலே ஆர்வலர்களையும் நண்பர்களையும் உறவுகளையும் ஒருங்கிணைக்கவுள்ளது.
ஒருங்கிணைப்பின் ஊடாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கும் சவால்களுக்கும் தீர்வினை பெற்றறுக் கொடுத்தல் இம் மண்ணிலே வாழ்ந்து கொண்டிருக்கின்ற சொந்தங்களின் வளமான வாழ்வை மகிழ்வான வாழ்வை வளம்படுத்தல் பண்பாடும் பாரம்பரியமும் மாறாத நவீனத்துவம் கலந்த ஒரு வளமிக்க பிரதேசமாக மாற்றியமைத்தல் அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற்று அவற்றின் ஊடாக அபிவிருத்தியை மேம்படுத்தல் என்பன இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாக காணப்படுகின்றன.
இது இலங்கைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற முன்னோடி செயற்திட்டமாக கருதி அனைவரும் இந்த அபிவிருத்திக்கு உங்கள் உதவிக்கரத்தை நீட்ட வேண்டும்.
அதுமாத்திரமன்றி கடந்த காலங்களிலே அரச அரசார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்பட்ட பல மில்லியன் ரூபாய் வீண்விரயமாக்கப்பட்டமையும் கவலைக்குரிய விடயமாக உள்ளது
குறிப்பாக துறைமுகத்தினுடைய சிதைந்த அழிவுகள், 8 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை காணவில்லை போன்ற சில செயற்பாடுகள் எதிர்காலத்தில் இடம்பெறாவண்ணம் உறதிப்படுத்தி மக்கள் அமைப்பாக மக்களை வலுப்படுத்துவதன் ஊடாக நெடுந்தீவை அபிவிருத்தி செய்ய திட்மிட்டுள்ளோம்.
இந்த நிகழ்விலே மூலிகைக்கண்காட்சி, கல்விக் கண்காட்சி, பனைசார் உணவுகள் , விவசாய கைவினைகள் கடலுணவு சார்ந்த உள்ளுர் உற்பத்தி பாரம்பரிய கலை நிகழ்வுகள் , விளையாட்டுக்கள் நூல் வெளியீடு இலக்கிய வெளியீடு போன்றனவும் இடம்பெறவிருக்கின்றது.
ஆகவே நெடுந்தீவின் நிலைபேறான அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனமாகிய எங்களுக்கு பூரண ஒத்துழைப்பை தந்து எம் கிராமத்தை வளப்படுத்த கரம் கொடுங்கள் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மீண்டும் ஊருக்குப் போகலாம்” நெடுவூர்த் திருவிழா நெடுந்தீவு மண்ணையும் மக்களையும் நிலைபேறான அபிவிருத்தப் பாதையிலே இட்டுச் செல்வதற்காக நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் "மீண்டும் ஊருக்குப் போகலாம்" என்ற தொனிப்பொருளில் நெடுவூர்த் திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 10 ஆம் திகதிவரை நெடுந்தீவு மண்ணிலே நடத்துவதற்காக திட்டமிட்டுள்ளது. குறித்த இந்த நிகழ்வு உலகம் முழுவதிலும் வாழும் எமது ஊர் சார்ந்த ஆர்வலர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு ஒன்று கூடலாக நெடுந்தீவு மண்ணிலே முன்னெடுக்கப்படவுள்ளது.பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்த நெடுந்தீவு மண் இன்று படிப்படியாக மக்கள் வெளியேறி மக்களற்ற பிரதேசமாக மாறக்கூடிய பேராபத்தை எதிர்நோக்கக்கூடிய கட்டத்திலுள்ளது. நெடுந்தீவின் நிலைபேறான அபிவிருத்தி இந்த நிகழ்வின் பிரதான நோக்கமாக இருக்கிறது. நெடுந்தீவிலே ஆர்வலர்களையும் நண்பர்களையும் உறவுகளையும் ஒருங்கிணைக்கவுள்ளது. ஒருங்கிணைப்பின் ஊடாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கும் சவால்களுக்கும் தீர்வினை பெற்றறுக் கொடுத்தல் இம் மண்ணிலே வாழ்ந்து கொண்டிருக்கின்ற சொந்தங்களின் வளமான வாழ்வை மகிழ்வான வாழ்வை வளம்படுத்தல் பண்பாடும் பாரம்பரியமும் மாறாத நவீனத்துவம் கலந்த ஒரு வளமிக்க பிரதேசமாக மாற்றியமைத்தல் அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற்று அவற்றின் ஊடாக அபிவிருத்தியை மேம்படுத்தல் என்பன இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாக காணப்படுகின்றன. இது இலங்கைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற முன்னோடி செயற்திட்டமாக கருதி அனைவரும் இந்த அபிவிருத்திக்கு உங்கள் உதவிக்கரத்தை நீட்ட வேண்டும். அதுமாத்திரமன்றி கடந்த காலங்களிலே அரச அரசார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்பட்ட பல மில்லியன் ரூபாய் வீண்விரயமாக்கப்பட்டமையும் கவலைக்குரிய விடயமாக உள்ளது குறிப்பாக துறைமுகத்தினுடைய சிதைந்த அழிவுகள், 8 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை காணவில்லை போன்ற சில செயற்பாடுகள் எதிர்காலத்தில் இடம்பெறாவண்ணம் உறதிப்படுத்தி மக்கள் அமைப்பாக மக்களை வலுப்படுத்துவதன் ஊடாக நெடுந்தீவை அபிவிருத்தி செய்ய திட்மிட்டுள்ளோம். இந்த நிகழ்விலே மூலிகைக்கண்காட்சி, கல்விக் கண்காட்சி, பனைசார் உணவுகள் , விவசாய கைவினைகள் கடலுணவு சார்ந்த உள்ளுர் உற்பத்தி பாரம்பரிய கலை நிகழ்வுகள் , விளையாட்டுக்கள் நூல் வெளியீடு இலக்கிய வெளியீடு போன்றனவும் இடம்பெறவிருக்கின்றது. ஆகவே நெடுந்தீவின் நிலைபேறான அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனமாகிய எங்களுக்கு பூரண ஒத்துழைப்பை தந்து எம் கிராமத்தை வளப்படுத்த கரம் கொடுங்கள் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.