• Sep 06 2025

பலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம்; மூதூரில் அமைதிப் பேரணி

Chithra / Sep 5th 2025, 3:09 pm
image

பலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப் பொருளில் மூதூரில் இன்று ஜும்ஆ தொழுகையின் பின்னர் அமைதிப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

மூதூர் சிவில் அமைப்புக்களின் ஒன்றியம் இவ் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.

மூதூர் -அக்கரைச்சேனை ஜும்ஆ பள்ளிவாசலிலிருந்து ஆரம்பமான இப்பேரணி பிரதான வீதியூடாகச் சென்று மூதூர் பிரதேச செயலக முன்றலை சென்றடைந்தது.

அமைதிப் பேரணியில் ஈடுபட்டோர் சுலோகங்களை ஏந்தி கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் எனும் தொணிப் பொருளின் கீழ் இடம்பெற்ற பேரணியில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


பலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம்; மூதூரில் அமைதிப் பேரணி பலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப் பொருளில் மூதூரில் இன்று ஜும்ஆ தொழுகையின் பின்னர் அமைதிப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.மூதூர் சிவில் அமைப்புக்களின் ஒன்றியம் இவ் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.மூதூர் -அக்கரைச்சேனை ஜும்ஆ பள்ளிவாசலிலிருந்து ஆரம்பமான இப்பேரணி பிரதான வீதியூடாகச் சென்று மூதூர் பிரதேச செயலக முன்றலை சென்றடைந்தது.அமைதிப் பேரணியில் ஈடுபட்டோர் சுலோகங்களை ஏந்தி கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் எனும் தொணிப் பொருளின் கீழ் இடம்பெற்ற பேரணியில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement