• Sep 21 2024

பெருந்தோட்டத்துறை தொடர்பான கடிதங்கள் இனி தமிழில்! - அமைச்சர் மனுஷ

Chithra / Jan 9th 2023, 9:10 pm
image

Advertisement

பெருந்தோட்டத்துறை தொடர்பில் வழங்கப்படும் சகல கடிதங்களையும் தமிழ் மொழியில் அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பொதுவான தொழிலாளர் சட்டம் ஒன்று உருவாக்கப்படும் போது பெருந்தோட்ட தொழிலாளர்கள் மீது தாக்கத்தை செலுத்தும் விடயங்கள் தொடர்பில் தனித்தனியாக விசேட அவதானம் செலுத்துமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள தொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட கூட்டம் ஒன்றின் போது அதிகாரிகளுக்கு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றிருந்ததாக தொழில் அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பெருந்தோட்டத் துறை தொடர்பான சட்டங்களை வினைத்திறனாகவும் வலுவாகவும் மேற்கொள்ளுமாறும் பெருந்தோட்ட மக்களின் முறைப்பாடுகளின் போது வினைத்திறனாக செயற்பட்டு அவற்றை தீர்ப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அதேநேரம் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட நடவடிக்கை பிரிவை நிறுவுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்களுக்கான ஓய்வு விடுதி வசதிகள் மற்றும் கழிவறை வசதிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ் மற்றும் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட தரப்பினர் ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர்.

குறித்த விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு துமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார அதிகாரிகளை அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.


பெருந்தோட்டத்துறை தொடர்பான கடிதங்கள் இனி தமிழில் - அமைச்சர் மனுஷ பெருந்தோட்டத்துறை தொடர்பில் வழங்கப்படும் சகல கடிதங்களையும் தமிழ் மொழியில் அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.பொதுவான தொழிலாளர் சட்டம் ஒன்று உருவாக்கப்படும் போது பெருந்தோட்ட தொழிலாளர்கள் மீது தாக்கத்தை செலுத்தும் விடயங்கள் தொடர்பில் தனித்தனியாக விசேட அவதானம் செலுத்துமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.கொழும்பில் உள்ள தொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட கூட்டம் ஒன்றின் போது அதிகாரிகளுக்கு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றிருந்ததாக தொழில் அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.பெருந்தோட்டத் துறை தொடர்பான சட்டங்களை வினைத்திறனாகவும் வலுவாகவும் மேற்கொள்ளுமாறும் பெருந்தோட்ட மக்களின் முறைப்பாடுகளின் போது வினைத்திறனாக செயற்பட்டு அவற்றை தீர்ப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.அதேநேரம் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட நடவடிக்கை பிரிவை நிறுவுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.பெருந்தோட்ட மக்களுக்கான ஓய்வு விடுதி வசதிகள் மற்றும் கழிவறை வசதிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ் மற்றும் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட தரப்பினர் ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர்.குறித்த விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு துமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார அதிகாரிகளை அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement