• Apr 04 2025

17 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

Chithra / Apr 3rd 2025, 2:40 pm
image

 

நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, மொனராகலை மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் மையம் வெளியிட்டுள்ளது.

இன்று இரவு 11.00 மணி வரை வானிலை முன்னறிவிப்பு அமுலில் இருக்கும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்று எச்சரித்துள்ள திணைக்களம், மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.


17 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை  நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, மொனராகலை மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் மையம் வெளியிட்டுள்ளது.இன்று இரவு 11.00 மணி வரை வானிலை முன்னறிவிப்பு அமுலில் இருக்கும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்று எச்சரித்துள்ள திணைக்களம், மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement