• Nov 23 2024

மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திர விவகாரம்- முன்னாள் எம்.பி திலீபன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..!

Sharmi / Oct 1st 2024, 3:23 pm
image

இன்றைய தினம்(01) காலை வெளியான E-பத்திரிக்கை ஒன்றுக்கு எதிராக முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாக ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்

 குறித்த பத்திரிக்கையில் தனது புகைப்படத்தை பயன்படுத்தியதுடன் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இரண்டு மதுபானசாலைக்கான அனுமதி பத்திரம் தனக்கு வழங்கியிருப்பதாக போலியான செய்தியை வெளியிட்டுள்ளனர் 

மேலும் 'எந்தவிதமான ஆதாரமும் இன்றி குறித்த செய்தியை வெளியிட்டுள்ளதானது தனக்கு மனவுளைச்சலை கொடுப்பதுடன், நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தாங்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியில் (EPDP) வீனை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் அதனால் தன்மீது அவதூறு பரப்பி தனது வெற்றியை தடுப்பதற்கான முயற்சியில் குறித்த பத்திரிக்கையின் ஆசிரியர் செயல்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்

இதேவேளை குறித்த பத்திரிக்கைக்கும் அப்பத்திரிக்கையின் ஆசிரியருக்கும் எதிராக தன்னால் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றிலும் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திர விவகாரம்- முன்னாள் எம்.பி திலீபன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு. இன்றைய தினம்(01) காலை வெளியான E-பத்திரிக்கை ஒன்றுக்கு எதிராக முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாக ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார் குறித்த பத்திரிக்கையில் தனது புகைப்படத்தை பயன்படுத்தியதுடன் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இரண்டு மதுபானசாலைக்கான அனுமதி பத்திரம் தனக்கு வழங்கியிருப்பதாக போலியான செய்தியை வெளியிட்டுள்ளனர் மேலும் 'எந்தவிதமான ஆதாரமும் இன்றி குறித்த செய்தியை வெளியிட்டுள்ளதானது தனக்கு மனவுளைச்சலை கொடுப்பதுடன், நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தாங்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியில் (EPDP) வீனை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் அதனால் தன்மீது அவதூறு பரப்பி தனது வெற்றியை தடுப்பதற்கான முயற்சியில் குறித்த பத்திரிக்கையின் ஆசிரியர் செயல்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்இதேவேளை குறித்த பத்திரிக்கைக்கும் அப்பத்திரிக்கையின் ஆசிரியருக்கும் எதிராக தன்னால் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றிலும் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement