• Jan 23 2025

தலைமுடியை வெட்டி சிறுமி மீது கொடூர தாக்குதல் - சிறிய தாய் கைது

Chithra / Dec 6th 2024, 8:27 am
image

 

பதுளையில் 14 வயதுடைய சிறுமியின் தலைமுடியை வெட்டி கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் சிறிய தாய் கைது செய்யப்பட்டதாக ரிதிமாலியயெத்த பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை - ரிதிமாலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறிய தாயின் கொடுமையால் காயமடைந்த பாடசாலை மாணவி மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சிறுமியின் தாய் சில வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டதாகவும், தந்தை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, அந்த பெண்ணுடனும் சிறுமியுடனும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக வகுப்பிற்குச் சென்ற சிறுமி வீடு திரும்ப தாமதமானதால் ஆத்திரமடைந்த சிறியதாய், 

சிறுமியின் கை, கால்களால் கொடூரமாக தாக்கி, தலைமுடியை வெட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

தலைமுடியை வெட்டி சிறுமி மீது கொடூர தாக்குதல் - சிறிய தாய் கைது  பதுளையில் 14 வயதுடைய சிறுமியின் தலைமுடியை வெட்டி கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் சிறிய தாய் கைது செய்யப்பட்டதாக ரிதிமாலியயெத்த பொலிஸார் தெரிவித்தனர்.பதுளை - ரிதிமாலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சிறிய தாயின் கொடுமையால் காயமடைந்த பாடசாலை மாணவி மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.சிறுமியின் தாய் சில வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டதாகவும், தந்தை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, அந்த பெண்ணுடனும் சிறுமியுடனும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.மேலதிக வகுப்பிற்குச் சென்ற சிறுமி வீடு திரும்ப தாமதமானதால் ஆத்திரமடைந்த சிறியதாய், சிறுமியின் கை, கால்களால் கொடூரமாக தாக்கி, தலைமுடியை வெட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement