• May 07 2025

உள்ளூராட்சி சபைத் தேர்தல்: யாழில் 56.6% வாக்குப்பதிவு..!

Sharmi / May 6th 2025, 5:55 pm
image

நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்கள் ஊடாகவும் மற்றும் அஞ்சல் மூல வாக்களிப்பு மூலமாகவும் 56.6℅  வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இன்று மதியம் 2 மணிவரையில் 105 தேர்தல் முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில்  இன்று காலை 8மணி முதல் பிற்பகல் 4 மணிவரை இடம்பெற்றது.

இந்நிலையில் தற்போது 5,783 மத்திய நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


உள்ளூராட்சி சபைத் தேர்தல்: யாழில் 56.6% வாக்குப்பதிவு. நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்கள் ஊடாகவும் மற்றும் அஞ்சல் மூல வாக்களிப்பு மூலமாகவும் 56.6℅  வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இதேவேளை இன்று மதியம் 2 மணிவரையில் 105 தேர்தல் முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில்  இன்று காலை 8மணி முதல் பிற்பகல் 4 மணிவரை இடம்பெற்றது.இந்நிலையில் தற்போது 5,783 மத்திய நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement