• Apr 19 2025

தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து - மூன்று பேர் படுகாயம்

Thansita / Apr 19th 2025, 7:58 pm
image

தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்தில், டிப்பர் லொறியில் இருந்து மூன்று பேர் காயமடைந்து டிக்கோயா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நோர்வூட் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

இந்த விபத்து ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் நோர்வூட் சென்ஜோண்டிலரி தோட்டப் பதகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த லொறியில் ஏழு பேர் பயணித்ததாகவும் தெரியவந்துள்ளது

பொகவந்தலாவ லொய்னோன் தோட்டத்திலிருந்து ஹட்டன் வனராஜா தோட்டத்திற்கு தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து - மூன்று பேர் படுகாயம் தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.இவ்விபத்தில், டிப்பர் லொறியில் இருந்து மூன்று பேர் காயமடைந்து டிக்கோயா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நோர்வூட் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் இந்த விபத்து ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் நோர்வூட் சென்ஜோண்டிலரி தோட்டப் பதகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த லொறியில் ஏழு பேர் பயணித்ததாகவும் தெரியவந்துள்ளதுபொகவந்தலாவ லொய்னோன் தோட்டத்திலிருந்து ஹட்டன் வனராஜா தோட்டத்திற்கு தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement