கேரளாவில் உள்ள முதியோர் நலக் காப்பகத்தில் வசித்து வந்த முதியோர்கள் இருவர் காதலித்து வந்த நிலையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்துள்ள காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
கேரளா முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 79 வயதுடைய விஜயராகவன் என்பவரும் 75 வயதுடைய சுலோச்சனா என்பவருமே இவ்வாறு காதலித்து திருமணத்தில் இணைந்து கொண்டவர்களாவர்.
கேரளா முதியோர் இல்லத்தில் வசிப்பதற்காக சென்ற இரு முதியவர்களும் ஒருவருக்கொருவர் சந்தித்து பேச ஆரம்பித்துள்ளனர். அவர்களிடையே அன்பு நெருக்கமாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
ஒருவருக்கொருவர் அன்பாகவும் அரவணைப்பாகவும் அக்கறையுடனும் காதலித்த முதியவர்கள் இருவரும் திருமணத்திலும் இணைய விரும்பியுள்ளனர்.
தங்களது காதலை மகிழ்வுடன் முதியோர் இல்லத்திற்கு வெளிப்படுத்த, நிர்வாகத்தின் ஏற்பாட்டில் கேரளா உயர் கல்வி அமைச்சர் கலந்துகொண்டு முதியவர்களுக்கு திருமணத்தை செய்து வைத்துள்ளார்.
சிறுவயதில் காதலித்து திருமணம் செய்து குறிப்பிட்ட காலத்திலேயே விவாகரத்தை நோக்கிச் செல்லும் தற்போதைய காலகட்டத்தில் முதியவர்கள் இடையே மலர்ந்த காதல் திருமணம் வரை சென்றுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தான் காதலுக்கு வயதில்லை என்ற வாசகம் வெளிப்படுத்துகின்றது எனலாம். முதியவர்களின் திருமணத்திற்கு பலரும் தமது வாழ்த்துகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல் - திருமணம் செய்து வைத்த அமைச்சர் கேரளாவில் உள்ள முதியோர் நலக் காப்பகத்தில் வசித்து வந்த முதியோர்கள் இருவர் காதலித்து வந்த நிலையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்துள்ள காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. கேரளா முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 79 வயதுடைய விஜயராகவன் என்பவரும் 75 வயதுடைய சுலோச்சனா என்பவருமே இவ்வாறு காதலித்து திருமணத்தில் இணைந்து கொண்டவர்களாவர். கேரளா முதியோர் இல்லத்தில் வசிப்பதற்காக சென்ற இரு முதியவர்களும் ஒருவருக்கொருவர் சந்தித்து பேச ஆரம்பித்துள்ளனர். அவர்களிடையே அன்பு நெருக்கமாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஒருவருக்கொருவர் அன்பாகவும் அரவணைப்பாகவும் அக்கறையுடனும் காதலித்த முதியவர்கள் இருவரும் திருமணத்திலும் இணைய விரும்பியுள்ளனர். தங்களது காதலை மகிழ்வுடன் முதியோர் இல்லத்திற்கு வெளிப்படுத்த, நிர்வாகத்தின் ஏற்பாட்டில் கேரளா உயர் கல்வி அமைச்சர் கலந்துகொண்டு முதியவர்களுக்கு திருமணத்தை செய்து வைத்துள்ளார். சிறுவயதில் காதலித்து திருமணம் செய்து குறிப்பிட்ட காலத்திலேயே விவாகரத்தை நோக்கிச் செல்லும் தற்போதைய காலகட்டத்தில் முதியவர்கள் இடையே மலர்ந்த காதல் திருமணம் வரை சென்றுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தான் காதலுக்கு வயதில்லை என்ற வாசகம் வெளிப்படுத்துகின்றது எனலாம். முதியவர்களின் திருமணத்திற்கு பலரும் தமது வாழ்த்துகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.