• Jul 13 2025

யாழ்.மாநகர செங்குந்தா சந்தை தொகுதிக்கு யாழ்.மாநகர முதல்வர் அதிரடி விஜயம்!

shanuja / Jul 12th 2025, 7:46 pm
image

யாழ்ப்பாணம் மாநகர சபையின் நல்லூர் செங்குந்தா சந்தைக் கடைத் தொகுதியின் நிலமைகளை ஆராயும் விசேட கள விஜயம் ஒன்றை யாழ். மாநகரசபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா கடந்த 8ஆம் திகதி மேற்கொண்டிருந்தார்.


கள விஜயத்தில் சந்தைத் தொகுதியின் குத்தகைதாரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சந்தையின் வாடிக்கையாளர்களான மாநகர மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் முதல்வர் ஆராய்ந்தார். அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.


மேலும் சந்தையின் சுகாதார நிலமைகளில் காணப்பட்ட குறைபாடுகள் தொடர்பில் குத்தகைதாரர்களுக்கு தெளிவுபடுத்தியதுடன், கழிவுகளை தரம் பிரித்து சேகரித்து மாநகர வாகனங்களில் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். சந்தையின் மலசலகூடம் மிகவும் மோசமாக காணப்பட்ட நிலையில் முதல்வரின் உத்தரவுக்கு அமைவாக உடனடியாக துப்பரவு செய்யும் நடவடிக்கை இடம்பெற்றதுடன், தொடர்ந்தும் மலசலகூடம் துப்பரவாக இருப்பதை மாநகர சந்தை மேற்பார்வையாளர் உறுதி செய்ய வேண்டும் என்பதையும் முதல்வர்  சுட்டிக்காட்டினார். 


செங்குந்தா சந்தையின் முன்புற மாநகர கடைகளின் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பிலும் கடை குத்தகைதாரர்களுடன் முதல்வர் கலந்துரையாடினார். செங்குந்தா சந்தை தொகுதியின் முக்கிய பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தர தீர்வை பெற்றுத் தருவதாகவும் முதல்வர் வர்த்தகர்களுக்கு உறுதியளித்தார்.


குறித்த விஜயத்தில் யாழ் மாநகர பிரதம பொறியியலாளர், பிரதம வருமானவரி பரிசோதகர், மாநகரசபை உறுப்பினர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் எனப் பலரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.மாநகர செங்குந்தா சந்தை தொகுதிக்கு யாழ்.மாநகர முதல்வர் அதிரடி விஜயம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் நல்லூர் செங்குந்தா சந்தைக் கடைத் தொகுதியின் நிலமைகளை ஆராயும் விசேட கள விஜயம் ஒன்றை யாழ். மாநகரசபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா கடந்த 8ஆம் திகதி மேற்கொண்டிருந்தார்.கள விஜயத்தில் சந்தைத் தொகுதியின் குத்தகைதாரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சந்தையின் வாடிக்கையாளர்களான மாநகர மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் முதல்வர் ஆராய்ந்தார். அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.மேலும் சந்தையின் சுகாதார நிலமைகளில் காணப்பட்ட குறைபாடுகள் தொடர்பில் குத்தகைதாரர்களுக்கு தெளிவுபடுத்தியதுடன், கழிவுகளை தரம் பிரித்து சேகரித்து மாநகர வாகனங்களில் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். சந்தையின் மலசலகூடம் மிகவும் மோசமாக காணப்பட்ட நிலையில் முதல்வரின் உத்தரவுக்கு அமைவாக உடனடியாக துப்பரவு செய்யும் நடவடிக்கை இடம்பெற்றதுடன், தொடர்ந்தும் மலசலகூடம் துப்பரவாக இருப்பதை மாநகர சந்தை மேற்பார்வையாளர் உறுதி செய்ய வேண்டும் என்பதையும் முதல்வர்  சுட்டிக்காட்டினார். செங்குந்தா சந்தையின் முன்புற மாநகர கடைகளின் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பிலும் கடை குத்தகைதாரர்களுடன் முதல்வர் கலந்துரையாடினார். செங்குந்தா சந்தை தொகுதியின் முக்கிய பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தர தீர்வை பெற்றுத் தருவதாகவும் முதல்வர் வர்த்தகர்களுக்கு உறுதியளித்தார்.குறித்த விஜயத்தில் யாழ் மாநகர பிரதம பொறியியலாளர், பிரதம வருமானவரி பரிசோதகர், மாநகரசபை உறுப்பினர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் எனப் பலரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement