• Sep 08 2024

குறைந்த கட்டணத்தில் ஹெலிகொப்டர் பயணம்! சமூக ஊடகங்களில் பரவும் விளம்பரம் தொடர்பில் எச்சரிக்கை

Chithra / Jul 18th 2024, 10:06 am
image

Advertisement

 

குறைந்த கட்டணத்தில்  ஹெலிகொப்டர் பயணத்திற்கு பதிவு செய்யுமாறு சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வசந்த அல்விஸ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செய்திகளின் ஊடாக தங்களது தனிப்பட்ட தகவல்களை மோசடியான முறையில் திருடும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று (17) காலை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் இதேபோன்று புல்வெளி வெட்டும் சாதனம் தொடர்பான விளம்பரம் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதாகவும் அதுவும் மோசடியான விளம்பரம் எனவும், அது தற்போது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான மோசடியான செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், முகப்புத்தகம்,வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் இவ்வாறான விளம்பரங்கள் அதிகளவில் பரவிவருவதுடன், தற்போது பரவும் ஹெலிகாப்டர் பயணம் குறித்து அவதானமாக செயற்படுமாறும் மக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

குறைந்த கட்டணத்தில் ஹெலிகொப்டர் பயணம் சமூக ஊடகங்களில் பரவும் விளம்பரம் தொடர்பில் எச்சரிக்கை  குறைந்த கட்டணத்தில்  ஹெலிகொப்டர் பயணத்திற்கு பதிவு செய்யுமாறு சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வசந்த அல்விஸ் தெரிவித்துள்ளார்.இவ்வாறான செய்திகளின் ஊடாக தங்களது தனிப்பட்ட தகவல்களை மோசடியான முறையில் திருடும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நேற்று (17) காலை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.இதற்கு முன்னரும் இதேபோன்று புல்வெளி வெட்டும் சாதனம் தொடர்பான விளம்பரம் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதாகவும் அதுவும் மோசடியான விளம்பரம் எனவும், அது தற்போது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறான மோசடியான செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும், முகப்புத்தகம்,வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் இவ்வாறான விளம்பரங்கள் அதிகளவில் பரவிவருவதுடன், தற்போது பரவும் ஹெலிகாப்டர் பயணம் குறித்து அவதானமாக செயற்படுமாறும் மக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement