• Nov 28 2024

மன்னாரில் தாழ் நில பிரதேசங்கள் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகும் நிலை...!samugammedia

Sharmi / Dec 16th 2023, 10:47 am
image

மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 72 குடும்பங்களை சேர்ந்த 161 நபர்கள் இடம் பெயர்ந்து தற்காலிக இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அதே நேரம் மன்னார் பிரதேச செயலக பிரிவில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்கள் வீட்டுகளில் தங்கியிருப்பாதாக மன்னார் பிரதேச அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால் மாவட்டத்தில் பெரும்பாலான தாழ் நில பிரதேசங்கள் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே. திலீபன் தெரிவித்துள்ளார்

பாலியாறு பறங்கியாறு நீர் மட்டம் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் மன்னார் -யாழ்ப்பாணம்(ஏ-32) பிரதான வீதி வெள்ள நீரில் மூழ்கும் வாய்ப்பு காணப்படுகின்றமையினால் அவ் வீதியூடாக பயணம் செய்யும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுகொண்டுள்ளார்.

எனவே, தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால் மக்கள் பாதுகாப்புடன் செயற்படுவதோடு அவசர உதவிக்கு மன்னார் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தொலைபேசி இலக்கமான 0232250133 தொடர்பு கொள்ளவும்  அதே நேரம் மன்னார் பிரதேச செயலக பிரிவில் அவசர தொடர்புகளுக்கு  0761258120 இலக்கத்தை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் தாழ் நில பிரதேசங்கள் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகும் நிலை.samugammedia மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 72 குடும்பங்களை சேர்ந்த 161 நபர்கள் இடம் பெயர்ந்து தற்காலிக இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.அதே நேரம் மன்னார் பிரதேச செயலக பிரிவில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்கள் வீட்டுகளில் தங்கியிருப்பாதாக மன்னார் பிரதேச அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.மேலும், மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால் மாவட்டத்தில் பெரும்பாலான தாழ் நில பிரதேசங்கள் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே. திலீபன் தெரிவித்துள்ளார்பாலியாறு பறங்கியாறு நீர் மட்டம் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் மன்னார் -யாழ்ப்பாணம்(ஏ-32) பிரதான வீதி வெள்ள நீரில் மூழ்கும் வாய்ப்பு காணப்படுகின்றமையினால் அவ் வீதியூடாக பயணம் செய்யும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுகொண்டுள்ளார்.எனவே, தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால் மக்கள் பாதுகாப்புடன் செயற்படுவதோடு அவசர உதவிக்கு மன்னார் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தொலைபேசி இலக்கமான 0232250133 தொடர்பு கொள்ளவும்  அதே நேரம் மன்னார் பிரதேச செயலக பிரிவில் அவசர தொடர்புகளுக்கு  0761258120 இலக்கத்தை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement