• May 17 2024

வீட்டை சுத்தம் செய்தவேளை ஜேர்மானியருக்கு அடித்த அதிஷ்டம்! samugammedia

Tamil nila / Apr 14th 2023, 6:13 am
image

Advertisement

ஜேர்மனியில் தனது வீட்டை சுத்தம் செய்தவருக்கு தங்க கட்டிகளும் தங்க நாணயங்களும் கிடைத்துள்ளன.

ஜேர்மன் நகரமான Heidelberg இல் வாழும் 29 வயது நபர் ஒருவருக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது.

இதனையடுத்து அவர் தான் கண்டுபிடித்த தங்கக்கட்டிகள் மற்றும் நாணயங்களை எடுத்துக்கொண்டு காவல் நிலையம் சென்றுள்ளார்.

ஜேர்மனியைப் பொறுத்தவரை, இதுபோல புதையல் ஏதாவது கிடைக்குமானால், அதை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவேண்டும். ஆறு மாதங்களுக்குள் அந்த புதையலின் சொந்தக்காரர் கிடைக்காவிட்டால், யார் புதையலைக் கண்டெடுத்தார்களோ, அவர்களுக்கே அது சொந்தமாகிவிடும்.

அப்படி, அதன் உரிமையாளர் கிடைத்துவிட்டாலும், அதில் ஒரு பங்கு அதைக் கண்டுபிடித்தவருக்குக் கொடுக்கப்படும். அந்த நபருக்குக் கிடைத்துள்ள புதையலின் மதிப்பு 118,633 பவுண்டுகள் ஆகும். அதன் உரிமையாளர் கிடைத்தால், புதையலைக் கண்டெடுத்தவருக்கு 3,518 பவுண்டுகள் கிடைக்கும். இல்லையென்றால், மொத்த புதையலையும் அதைக் கண்டுபிடித்தவரே வைத்துக்கொள்ளலாம்.

காவல்துறையினர் அந்த புதையலின் சொந்தக்காரரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

வீட்டை சுத்தம் செய்தவேளை ஜேர்மானியருக்கு அடித்த அதிஷ்டம் samugammedia ஜேர்மனியில் தனது வீட்டை சுத்தம் செய்தவருக்கு தங்க கட்டிகளும் தங்க நாணயங்களும் கிடைத்துள்ளன.ஜேர்மன் நகரமான Heidelberg இல் வாழும் 29 வயது நபர் ஒருவருக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது.இதனையடுத்து அவர் தான் கண்டுபிடித்த தங்கக்கட்டிகள் மற்றும் நாணயங்களை எடுத்துக்கொண்டு காவல் நிலையம் சென்றுள்ளார்.ஜேர்மனியைப் பொறுத்தவரை, இதுபோல புதையல் ஏதாவது கிடைக்குமானால், அதை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவேண்டும். ஆறு மாதங்களுக்குள் அந்த புதையலின் சொந்தக்காரர் கிடைக்காவிட்டால், யார் புதையலைக் கண்டெடுத்தார்களோ, அவர்களுக்கே அது சொந்தமாகிவிடும்.அப்படி, அதன் உரிமையாளர் கிடைத்துவிட்டாலும், அதில் ஒரு பங்கு அதைக் கண்டுபிடித்தவருக்குக் கொடுக்கப்படும். அந்த நபருக்குக் கிடைத்துள்ள புதையலின் மதிப்பு 118,633 பவுண்டுகள் ஆகும். அதன் உரிமையாளர் கிடைத்தால், புதையலைக் கண்டெடுத்தவருக்கு 3,518 பவுண்டுகள் கிடைக்கும். இல்லையென்றால், மொத்த புதையலையும் அதைக் கண்டுபிடித்தவரே வைத்துக்கொள்ளலாம்.காவல்துறையினர் அந்த புதையலின் சொந்தக்காரரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement