• Nov 19 2024

பெரிய கல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம்!

Tamil nila / Aug 19th 2024, 7:18 pm
image

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்திபெற்ற பெரிய கல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன பஞ்சகுண்டபட்ச மஹா கும்பாபிஷேகம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கடந்த 17ஆம் திகதி கும்பாபிசேக கிரியைகளுடன் மஹா கும்பாபிசேக கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்ததுடன் நேற்று அடியார்கள் பத்திரக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தமூர்த்தி குருக்கள் தலைமையில் கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்தன.

இன்றைய தினம் புண்ணியாகவாசனம்,யாகபூஜை,ஹோமம்,மஹா பூரணாகுதி நடைபெற்று வேததோஸ்திரம்,நாதகீதாஞ்சலி,திருமுறை பாராயணம் நடைபெற்று பிரதான கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டன.

இதன் போது பரிபாலன ஆலயங்கள் மற்றும் மூல ஆலயங்கள் பக்தர்களின் அரோகரா கோசத்துடன் கும்பாபிசேகம் செய்யப்பட்டதுடன் மூலமூர்த்தியாக அடையளில் அமர்ந்துள்ள வடபத்திரகாளியம்மனுக்கு பிரதான கும்பாபிசேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து விசேட பூஜைகள் மற்றும் விசேடக அபிசேக பூஜைகள் நடைபெற்றுதுடன் விசேட அலங்கார பூஜைகளும் நடைபெற்றன.

ஆலயத்தில் தொடர்ந்து மணட்லாபிசேக நடைபெற்று எதிர்வரும் 30ஆம் திகதி சங்காபிசேகமும் நடைபெறவுள்ளது.

இன்றைய கும்பாபிசேக நிகழ்வில் நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



பெரிய கல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்திபெற்ற பெரிய கல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன பஞ்சகுண்டபட்ச மஹா கும்பாபிஷேகம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.கடந்த 17ஆம் திகதி கும்பாபிசேக கிரியைகளுடன் மஹா கும்பாபிசேக கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்ததுடன் நேற்று அடியார்கள் பத்திரக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தமூர்த்தி குருக்கள் தலைமையில் கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்தன.இன்றைய தினம் புண்ணியாகவாசனம்,யாகபூஜை,ஹோமம்,மஹா பூரணாகுதி நடைபெற்று வேததோஸ்திரம்,நாதகீதாஞ்சலி,திருமுறை பாராயணம் நடைபெற்று பிரதான கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டன.இதன் போது பரிபாலன ஆலயங்கள் மற்றும் மூல ஆலயங்கள் பக்தர்களின் அரோகரா கோசத்துடன் கும்பாபிசேகம் செய்யப்பட்டதுடன் மூலமூர்த்தியாக அடையளில் அமர்ந்துள்ள வடபத்திரகாளியம்மனுக்கு பிரதான கும்பாபிசேகம் நடைபெற்றது.அதனை தொடர்ந்து விசேட பூஜைகள் மற்றும் விசேடக அபிசேக பூஜைகள் நடைபெற்றுதுடன் விசேட அலங்கார பூஜைகளும் நடைபெற்றன.ஆலயத்தில் தொடர்ந்து மணட்லாபிசேக நடைபெற்று எதிர்வரும் 30ஆம் திகதி சங்காபிசேகமும் நடைபெறவுள்ளது.இன்றைய கும்பாபிசேக நிகழ்வில் நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement