• May 11 2024

மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்! SamugamMedia

Tamil nila / Mar 14th 2023, 8:06 pm
image

Advertisement

மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவையும் மக்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களையும் குறைத்து, சமூகத்தில் நிலவும் அமைதியின்மையை சீர்செய்ய கொள்கை ரீதியான உரிய பொறிமுறையை தயாரிக்குமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.

மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வறக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் ஆகியோரின் கையொப்பத்துடன், ஜனாதிபதிக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதிகரித்துள்ள பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொண்டு, அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவை குறைத்து மக்கள் வாழ்க்கையை பாதுகாப்பதற்கு மக்கள் நேய கொள்கையினை நடைமுறைப்படுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தை பாதுகாப்பதென்பது சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் ஊடாக மக்களின் இறைமையை உறுதிப்படுத்துவதாகும் என வலியுறுத்தியுள்ள மகாநாயக்கத் தேரர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய முறையில் நடத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் SamugamMedia மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவையும் மக்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களையும் குறைத்து, சமூகத்தில் நிலவும் அமைதியின்மையை சீர்செய்ய கொள்கை ரீதியான உரிய பொறிமுறையை தயாரிக்குமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வறக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் ஆகியோரின் கையொப்பத்துடன், ஜனாதிபதிக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதிகரித்துள்ள பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொண்டு, அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவை குறைத்து மக்கள் வாழ்க்கையை பாதுகாப்பதற்கு மக்கள் நேய கொள்கையினை நடைமுறைப்படுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.ஜனநாயகத்தை பாதுகாப்பதென்பது சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் ஊடாக மக்களின் இறைமையை உறுதிப்படுத்துவதாகும் என வலியுறுத்தியுள்ள மகாநாயக்கத் தேரர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய முறையில் நடத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement