• Apr 26 2024

மஹிந்த, பசில், கோட்டா - இந்த மூன்று பேரின் வருகையால் இலங்கை இராஜதந்திர ரீதியில் வீழ்த்தப்பட்டுள்ளது - விஜயமுனி சொய்சா! SamugamMedia

Tamil nila / Mar 18th 2023, 3:37 pm
image

Advertisement

இராஜதந்திர ரீதியில் வீழ்த்தப்பட்டுள்ள இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவது மிகவும் கடினமான விடயம் என முன்னாள்  உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா சுட்டிக்காட்டியுள்ளார்.


கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்றுஇடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பதிலுள்ள இரண்டு அமெரிக்க பிரஜைகளினாலே இந்த நாடு இந்த நிலையை அடைந்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.


குடும்ப ஆட்சியை அமைப்பதற்கு ராஜபக்ச குடும்பம் முயற்சி செய்ததாலேயே தான், அவர்களிடம் இருந்து பிரிந்து வெளியில் வந்ததாக விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.


யுத்த காலத்தில் கூட நாட்டில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்ச யுத்தத்தை நிறைவு செய்தார் என்றதற்காக நாட்டை அவர் மட்டுமே ஆட்சி செய்ய முடியும் என்று கருத முடியாது. 


அவ்வாறு நம்பி நாட்டை ஒப்படைத்தமையின் காரணமாகவே இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசாங்கத்தினாலேயே இந்நாடு வங்குரோத்தடைந்துள்ளது என அறிவிக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.


அது மாத்திரமின்றி தேசிய பாதுகாப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைப்பதாகக் கூறி பெற்ற பணத்தை தமது சட்டைப் பைகளுக்குள் போட்டுக் கொண்டனரே தவிர, அதனால் எவ்வித பயனும் இல்லை. 


இவ்வாறானவற்றிலிருந்து நாட்டை மீட்டு முன்னேற்றக் கூடிய இயலுமை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு மாத்திரமே காணப்படுவதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மஹிந்த, பசில், கோட்டா - இந்த மூன்று பேரின் வருகையால் இலங்கை இராஜதந்திர ரீதியில் வீழ்த்தப்பட்டுள்ளது - விஜயமுனி சொய்சா SamugamMedia இராஜதந்திர ரீதியில் வீழ்த்தப்பட்டுள்ள இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவது மிகவும் கடினமான விடயம் என முன்னாள்  உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா சுட்டிக்காட்டியுள்ளார்.கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்றுஇடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பதிலுள்ள இரண்டு அமெரிக்க பிரஜைகளினாலே இந்த நாடு இந்த நிலையை அடைந்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.குடும்ப ஆட்சியை அமைப்பதற்கு ராஜபக்ச குடும்பம் முயற்சி செய்ததாலேயே தான், அவர்களிடம் இருந்து பிரிந்து வெளியில் வந்ததாக விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.யுத்த காலத்தில் கூட நாட்டில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.மஹிந்த ராஜபக்ச யுத்தத்தை நிறைவு செய்தார் என்றதற்காக நாட்டை அவர் மட்டுமே ஆட்சி செய்ய முடியும் என்று கருத முடியாது. அவ்வாறு நம்பி நாட்டை ஒப்படைத்தமையின் காரணமாகவே இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசாங்கத்தினாலேயே இந்நாடு வங்குரோத்தடைந்துள்ளது என அறிவிக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.அது மாத்திரமின்றி தேசிய பாதுகாப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைப்பதாகக் கூறி பெற்ற பணத்தை தமது சட்டைப் பைகளுக்குள் போட்டுக் கொண்டனரே தவிர, அதனால் எவ்வித பயனும் இல்லை. இவ்வாறானவற்றிலிருந்து நாட்டை மீட்டு முன்னேற்றக் கூடிய இயலுமை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு மாத்திரமே காணப்படுவதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement